/* ]]> */
Apr 132018
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019  விளம்பி  வருஷம்:

tamil puththantu

மகர ராசி:

makara-rasi

இந்த வருடம் குருபகவான்  செப்டம்பர்  மாதம் வரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அளப்பரிய நன்மைகள் நடக்கும்.  செப்டம்பர்  மாதம்  11- இடத்துக்குப் போகிறார்.  சனி 7 1/2ச ச் சனியாக 12-ம் இடத்திலும், ராகு 7-லும் கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கிறாரகள்.

இனி குருவின் சஞ்சார பலன்களைப் பாக்கும்பொழுது, குரு இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை உங்கள் ராசிக்கு   10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு  கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை  கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக,  வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும.

குரு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம். தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த வேண்டும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில் இடமாற்றங்கள் வரும்.

செப்டம்பர்  மாதத்துக்குப் பிறகு, குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
. எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்  சிறப்பாக இருக்கும்.

இந்த வருடம் , உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இது ஏழரைச் சனியின் முதல் கட்டமாகும் . இந்த ஏழரைச் சனிக் காலத்தில் , தரித்திரம், நஷ்டம், பயனற்ற அலைச்சல், ஆகியவை உண்டாகும். வெகு தூரப் பயணங்கள் ஏற்படும். கட்டுக்கடங்காத அளவுக்கும், தகுதிக்கு மீறியும் செலவுகள் ஏற்படும். மனதில் எப்பொழுதும் சங்கடமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்.

வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாத நிலை, எந்தத் தொழிலையும் செய்ய முடியாமை , செய்ய மனமில்லாமை, என்னும் இவை உண்டாகும். உள்ள பணமெல்லாம் பல வழிகளிலும் நஷ்டமாகும். மாரக தசை நடந்து, ஆயுர்த் தாயமும் ஆயுள் முடிவும் நெருங்கியிருந்து, இது மூன்றாம் சுற்று 7 1./2ச் சனியாகவும் அமைந்தால், உயிருக்கே கண்டம் ஏற்படலாம். மான பனக்ம், கௌரவ பங்கம் போன்றவை ஏற்படும். சிந்தை தெளிவின்மையால், சரியான முடிவு செய்ய முடியாமல் எல்லாக் காரியங்களும் கெடும். மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரும். கால்நடை அழியும். விருப்பத்திற்கு மாறாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்
துயரங்களும் வேதனைகளும் சூழ்ந்தபடிதான் இருக்கும்.
பெண்களுக்கு இதனை விரயசனி என்பார்கள். முதல் ஆறு மாதம் உங்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியான பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும் சில சமயம் உடல் அசதியும், சிறு வாகன விபத்து அல்லது தேவையற்ற மனக் குழப்பம் போன்றவை வாட்டும். உங்கள் மனதைரியத்தை அசைத்துப் பார்க்கும். அதற்கு இடமளிக்காமல் தனித்து நின்று உங்கள் பயணத்தை தொடருங்கள். அப்போதுதான் சனியின் பாதிப்பு உங்களை அதிகம் வாட்டாது.
மாணவர்களுக்கு சனி பகவானின் ஆரம்பகால மாற்றம், சிற்சில சங்கடங்களையும் தடைகளையும் கல்வி அடிப்படையில் ஏற்படுத்தும். நீங்கள் கரடுமுரடான பாதையைக் கடக்க வேண்டிவரும். இதனால்,குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் அதிருப்திக்கு ஆளாக நேரும். எவ்வளவுதான் முயற்சி செய்து படித்தாலும், பாதியளவே உங்களுக்கு வெற்றி கிட்டும். நீங்கள் விரும்பும் அல்லது தேர்ந்தெடுத்து படிக்க நினைக்கும் விருப்பப்  பாடம் கிட்டாமல் போக இந்த ஏழரைச் சனியின் விரயச் சனியானது சதி செய்யும். சிலருக்கு உடல்நலக் கோளாறு, அல்லது ஞாபக மறதி மற்றும் கல்வியில் ஆர்வமின்மை போன்றவை வழக்கம் போல ஏற்படவே செய்யும். நீங்கள் உங்கள் பங்கிற்கு அலுப்புடனும் உற்சாகமற்றும் கல்வியில் ஈடுபடுவதால், வெற்றி கனவாகி விடும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டாமல் போகும்.
அரசியல்வாதிகளுக்கு சனியின் மாற்றத்தில் ஆரம்ப காலமான 6 மாதத்தில் சில தேவையற்ற பிரச்சினைகள் அது பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் வட்டாரத்திலோ ஏற்பட்டு உங்களின் அமைதிக்கு ஊறு செய்யும். அதன்பிறகு குருவின் 9-மிட சஞ்சாரம் மற்றும் ராகுவின் 10-மிட சஞ்சாரம், கேதுவின் 4-மிட சஞ்சாரம் ஆகியவையும் கிட்டத்தட்ட ஆண்டு இறுதிவரை அனுகூலமாய் செயல்படுவதால், உங்கள் முயற்சி நல்ல வெற்றியையும். உங்கள் நிலையும் நல்ல வளர்ச்சி காணும். இருப்பினும் புதிதாக வரும் நபர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையேல் அவர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகககூடும். அதேபோல் தற்போதைய குருவின் கன்னி  ராசிப் பிரவேசமும் உங்களுக்கு சில சங்கடங்களையும் மனக் கவலையையும் ஏற்படுத்தும். மேலும் வெளிவட்டாரத்திலும் வீட்டிலும் உங்களுக்கு கெட்ட பெயர்கள் வர இந்த காலக் கட்டத்தில் வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு, ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான கடக  ராசிக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.

உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.
மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும்.
உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள். சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும். வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.வெள்ளிக் கிழமைகளில் சிவப்பு மலர் கொண்டு மகாலஷ்மியை வணங்கவும்.வினாயகரை வணங்கி, அவரது கோவிலைச் சுத்தம் செய்யவும்.

[ உங்களுடைய ஜாதகப்படியான விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர்,'www.moonramkonam.com@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்].
****************************

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>