/* ]]> */
Mar 242017
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2017-2018  ஹேவிளம்பி   வருஷம்:

புத்தாண்டு பலன்கள்

கும்ப  ராசி  
         இந்த வருடம் குருபகவான்  செப்டம்பர்   மாதம்  முதல், 9-ம் இடத்துக்குப் போகிறார். இது உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். ராகு-கேது முதலிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு 7, மற்றும் 1-ல் சஞ்சரிக்கப் போகிறார்கள். அந்த சஞ்சாரங்களின் மூலம் நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் இந்த ஆண்டின் இறுதியில் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் லாப ஸ்தானத்தில் வீற்றிருந்து  நற்பலன்களை வாரி வழங்குகிறார்.

குரு பகவான் தற்போது ராசிக்கு 8-மிடத்தில் அஷ்டம குருவாக சஞ்சரித்து கெடு பலன்களைத் தருகிறார். அதன்மூலம் பலவித துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகிறீகள்.  இந்த கெடு பலன்கள் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதிவரை தொடரும். ஆகஸ்டு  மாதம் 11-ம் தேதிக்குப் பிறகு, குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் டகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது உங்கள் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.

காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்   இந்த வருடம் நற்பலன்களை அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள் .பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனிவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அசனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இந்த கிரக சஞ்சாரம் 2 1/2 வருஷங்கள் நீடித்து உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். உங்களுக்கு பல வகையிலும் நன்மை செய்யும். பல வழிகளிலும் பணம் சேரும். நோய்கள் நீங்கி தேக பலமும் புதுப் பொலிவும் ஏற்படும். புதுத் தெம்பும் உற்சாகமும் கூடும். உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்தடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பர். இல்லற வாழ்வில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தவறான உறவுகளிலும் சிலர் மனம் செல்லலாம். ஆனால் எதிலும் வெற்றியே உண்டாகும்.
அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் உண்டாகும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பார்கள். உதவுவார்கள். எல்லாக் காரியங்களாலும் லாபம் உண்டாகும். வீட்டில் தேவையான அனைத்து உணவுப் பொருட்கள்,மற்றும் வசதியான வாழ்க்கைத் தேவைகள் நிரம்பி வழியும். எல்லா விதத்திலும் இந்த 2 1/2 வருடம் பூராவும் ராஜயோகம் நிறைந்த சுபயோக சந்தோஷ வாழ்க்கையே இருக்கும். எல்லா வகையிலும் சனி 11-ல் நல்லதையே செய்வார்.
பெண்களுக்கு   குடும்ப ஒற்றுமை ஓங்குவதோடு, உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது உறுதி. புகுந்த வீட்டிற்கு நீங்கள் செய்யும் உதவிகள் சிறியதே ஆயினும் உங்களை மிகவும் புகழ்ந்து தள்ளுவார்கள். கணவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார். உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார். இருப்பினும் வரும் ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேல் ஓராண்டு காலத்துக்கு உங்களின் உடல் நானில் அக்கறை செலுத்தவும். அதாவது குருவின் 8-மிட சஞ்சாரம் முடியும் வரை உங்களுக்கு தொல்லைகள் உண்டாகும். அதன்பிறகு உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முந்நிலையில் நல்ல காரியம் அல்லது சுப காரியம் இனிதே நடந்தேறும்.அது பெரும்பாலும், உறவினர் திருமணமாகவோ சகோதர சகோதரிகளின் திருமணமாகவோ அல்லது புகுந்த வீட்டாரின் திருமணமாகவோ எப்படி இருந்தாலும் அனைவரும் உங்களையே முன்னிறுத்தி கௌரவிப்பர். இந்த வகையில் உங்களின் செயலுக்கு பாராட்டுகள் குவியும்.  திறமையிருந்தும் அதற்கேற்ற உத்தியோக உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ இதுநாள் வரை உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அத்தகைய நிலை மாறி உங்களைத் தேடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்தடையும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத சிலருக்கு தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். சிலருக்கு மூத்த சகோதர சகோதரிகளின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். அதன்மூலம் நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும் யோகம் உண்டு.
மாணவர்களுக்கு:
உங்கள் உழைப்புக்கேற்ற பலன் உங்களைத் தேடிவர சனியின் 11-மிட சஞ்சாரம் பெரிதும் துணை புரியும், வீட்டிலும் வெளியிலும் உங்களைச் சேர்ந்தவர்களிடத்திலும் பாராட்டுக்குப் பஞ்சமே இருக்காது. சிறிதளவே நீங்கள் சிரமப்பட்டு படித்தாலும், அது பன்மடங்காக பலன் தர சனியின் இன்டஹ் சஞ்சாரம் துணைபுரியும். நீங்கள் விரும்பும் அல்லது உங்கள் தகுதிக்கேற்ற விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க ஏற்ற காலம் இதுவே ஆகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி  மூலையில் முடங்கிக் கிடந்த உங்களை உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிக் கொண்டு போகும். குருவின் சிம்மராசி சஞ்சாரத்தின் போது மட்டும் எச்சரிக்கை அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு   உங்களின் உழைப்பிற்கேற்ற புகழும் உயர்வும் நீங்கள் நினத்துப் பார்க்காத அளவிற்கப் பெருக, இந்த சனிபகவானின் சாதகமான 11-மிட மாற்றம் பெரிதும் துணை நிற்கும். மேலும்  குருவின்  9-மிட சஞ்சாரமும் இதற்கு வலு சேர்க்கும். உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். உங்களின் நீண்ட நாளைய நியாயமான கோரிக்கைகளும் ஆசைகள் மற்றும் கனவுகளும் இந்தகாலக் கட்டத்தில் எளிதில் நிறைவேறும். பொருளாதாரத் துறையிலும் கணிசமான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். சொத்து சேர்க்கை மற்றும் வாகன யோகம் போன்றவை உங்களின் உண்மையான உழைப்பைப் பார்த்து உங்களுக்கு மேல் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தாமாகவே முன்வந்து கொடுப்பார்கள். நீங்கள் எந்தத் துறையில் காலடி பதித்தாலும் வெற்றித் திருமகள் உங்கள் பக்கமே இருப்பாள்.

ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சிம்ம  ராசிக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.

உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.
மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும்.
உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம் :

பிரதோஷ காலங்களில் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவது துன்பங்களை விரட்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை  மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள்.  வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் , வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*****************************************************

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>