/* ]]> */
Apr 122018
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018  :விளம்பி   வருஷம்:

tamil puththantu

கும்ப  ராசி  :

kumpam

இந்த வருடம் குருபகவான்  செப்டம்பர்   மாதம்  வரை, 9-லும்  அதன் பிறகு 10-ம் இடத்துக்கும் போகிறார். ஆண்டின் முறப்குதி உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். ராகு-கேது முதலிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு 6, மற்றும் 12-ல் சஞ்சரிக்கப் போகிறார்கள்.. சனி பகவான் இந்த ஆண்டில் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் லாப ஸ்தானத்தில் வீற்றிருந்து  நற்பலன்களை வாரி வழங்குகிறார்.

செப்டம்பர் வரை, குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள்,  நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன்  காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள்   குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் டகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது உங்கள் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள்.  தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம்   இந்த வருடம் நற்பலன்களை அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள் .பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும்.

குரு 10-ம் இடத்துக்கு வரும்போது பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம். தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த வேண்டும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில் இடமாற்றங்கள் வரும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இந்த கிரக சஞ்சாரம் 2 1/2 வருஷங்கள் நீடித்து உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். உங்களுக்கு பல வகையிலும் நன்மை செய்யும். பல வழிகளிலும் பணம் சேரும். நோய்கள் நீங்கி தேக பலமும் புதுப் பொலிவும் ஏற்படும். புதுத் தெம்பும் உற்சாகமும் கூடும். உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்தடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பர். இல்லற வாழ்வில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தவறான உறவுகளிலும் சிலர் மனம் செல்லலாம். ஆனால் எதிலும் வெற்றியே உண்டாகும்.
அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் உண்டாகும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பார்கள். உதவுவார்கள். எல்லாக் காரியங்களாலும் லாபம் உண்டாகும். வீட்டில் தேவையான அனைத்து உணவுப் பொருட்கள்,மற்றும் வசதியான வாழ்க்கைத் தேவைகள் நிரம்பி வழியும். எல்லா விதத்திலும் இந்த 2 1/2 வருடம் பூராவும் ராஜயோகம் நிறைந்த சுபயோக சந்தோஷ வாழ்க்கையே இருக்கும். எல்லா வகையிலும் சனி 11-ல் நல்லதையே செய்வார்.
பெண்களுக்கு   குடும்ப ஒற்றுமை ஓங்குவதோடு, உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது உறுதி. புகுந்த வீட்டிற்கு நீங்கள் செய்யும் உதவிகள் சிறியதே ஆயினும் உங்களை மிகவும் புகழ்ந்து தள்ளுவார்கள். கணவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார். உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார். இருப்பினும் வரும் ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேல் ஓராண்டு காலத்துக்கு உங்களின் உடல் நானில் அக்கறை செலுத்தவும். அதாவது குருவின் 8-மிட சஞ்சாரம் முடியும் வரை உங்களுக்கு தொல்லைகள் உண்டாகும். அதன்பிறகு உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முந்நிலையில் நல்ல காரியம் அல்லது சுப காரியம் இனிதே நடந்தேறும்.அது பெரும்பாலும், உறவினர் திருமணமாகவோ சகோதர சகோதரிகளின் திருமணமாகவோ அல்லது புகுந்த வீட்டாரின் திருமணமாகவோ எப்படி இருந்தாலும் அனைவரும் உங்களையே முன்னிறுத்தி கௌரவிப்பர். இந்த வகையில் உங்களின் செயலுக்கு பாராட்டுகள் குவியும்.  திறமையிருந்தும் அதற்கேற்ற உத்தியோக உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ இதுநாள் வரை உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அத்தகைய நிலை மாறி உங்களைத் தேடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்தடையும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத சிலருக்கு தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். சிலருக்கு மூத்த சகோதர சகோதரிகளின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். அதன்மூலம் நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும் யோகம் உண்டு.
மாணவர்களுக்கு:
உங்கள் உழைப்புக்கேற்ற பலன் உங்களைத் தேடிவர சனியின் 11-மிட சஞ்சாரம் பெரிதும் துணை புரியும், வீட்டிலும் வெளியிலும் உங்களைச் சேர்ந்தவர்களிடத்திலும் பாராட்டுக்குப் பஞ்சமே இருக்காது. சிறிதளவே நீங்கள் சிரமப்பட்டு படித்தாலும், அது பன்மடங்காக பலன் தர சனியின் இன்டஹ் சஞ்சாரம் துணைபுரியும். நீங்கள் விரும்பும் அல்லது உங்கள் தகுதிக்கேற்ற விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க ஏற்ற காலம் இதுவே ஆகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி  மூலையில் முடங்கிக் கிடந்த உங்களை உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிக் கொண்டு போகும். குருவின் சிம்மராசி சஞ்சாரத்தின் போது மட்டும் எச்சரிக்கை அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு   உங்களின் உழைப்பிற்கேற்ற புகழும் உயர்வும் நீங்கள் நினத்துப் பார்க்காத அளவிற்கப் பெருக, இந்த சனிபகவானின் சாதகமான 11-மிட மாற்றம் பெரிதும் துணை நிற்கும். மேலும்  குருவின்  9-மிட சஞ்சாரமும் இதற்கு வலு சேர்க்கும். உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். உங்களின் நீண்ட நாளைய நியாயமான கோரிக்கைகளும் ஆசைகள் மற்றும் கனவுகளும் இந்தகாலக் கட்டத்தில் எளிதில் நிறைவேறும். பொருளாதாரத் துறையிலும் கணிசமான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். சொத்து சேர்க்கை மற்றும் வாகன யோகம் போன்றவை உங்களின் உண்மையான உழைப்பைப் பார்த்து உங்களுக்கு மேல் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தாமாகவே முன்வந்து கொடுப்பார்கள். நீங்கள் எந்தத் துறையில் காலடி பதித்தாலும் வெற்றித் திருமகள் உங்கள் பக்கமே இருப்பாள்.

இந்த வருடம் ராகு கடக ராசிக்கும் கேது மகர  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங் களுக்கு தொல்லைகொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.

எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.
உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள்.
கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தை தனது 3-ம் பார்வையால் பார்க்கிறார். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்து அவர்களுடைய மகிழ்ச்சியைப் பெறுக்குவீர்கள். உங்கள் செல்வாக்கும் புகழும் உயரும். கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். தேவைக்கேற்றபடி வருமானம் கிடைக்கும். தொழிலில் மேன்மை ஏறப்டும். புதிய தொழிலும் அமையும்.

.பரிகாரம்:

வினாயகர் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.    வெள்ளிக் கிழமைகளில் துரகையை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும்.  சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும்.  குரு பகவானின்  சஞ்சாரமும் சரியில்லாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
##################################

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>