/* ]]> */
Mar 292013
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்- விஜய வருஷம் 2013

கன்னி:

உத்திரம் (2,3&4);அஸ்தம்;சித்திரை(1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

                              இந்த விஜய வருஷத்தில்,  ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில்  இந்த ஆண்டு மே மாதம் 27-ம் தேதி  முதல் சஞ்சரிக்கிறார். சனி பகவான்  தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

                   துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி உச்ச சனியாக சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 4, 8 மற்றும் 11ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதன் விளைவாக உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது  வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு  விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். எட்டாம் இடத்தை சனி பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். ஆறுக்கு அதிபதியான சனி எட்டாம் இடத்தைப் பார்க்கிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு  கிடைப்பதில் தாமதமாகும். கடன் பாக்கிகள் வசூலாவதில் தாமதமாகும். பகையான நட்புகள் மறைமுக தொல்லைகளை ஏற்படுத்தலாம்.  உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

இனி ராகு கேது சஞ்சாரங்களைப் பார்க்குமிடத்து , ராகு பகவான் பலவகையான கற்பனைகளை உங்கள்  மனதில் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். அதை சாதிக்க வேண்டும், இதை சாதிக்க வேண்டும் என்று செயல்பாட்டுக்கு வரமுடியாத , செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருமணம் ஆகாத வாலிப  வயதினராக இருந்தால், இந்த சமயத்தில் காதல் வயப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த காதல் ஜோடி வேற்று மதத்தினராகவோ, அல்லது வேற்று இனத்தவராகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தக் காலத்தில் திருமணமாகி ,புத்திரப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்

                 உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில்  குறையும். குடும்பத்தினரின் வெறுப்பிற்குப்  பாத்திரம் ஆவீர்கள். நண்பர்களும், உறவினர்களும்  உங்களை விட்டுப் பிரிய நேரும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போவதோடு புது பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.

உங்கள் மனோபலம்  குறைவடையும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு அல்லது சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்கள்  வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.

சில சமயம் திடீர் வருமானமும் கிடைக்கலாம். நல்ல பொருட்சேர்க்கை ஏற்படக்கூடும். வீணான மனக் கசப்பும் அலைச்சலும் ஏற்படுவதற்கன வாய்ப்புகள் உண்டு. கோர்ட், கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டாம். அலைச்சல் மனக்கவலை ஏற்படும்.  உறங்கக்கூட நேரமில்லாமல் போகலாம். கணவன்- மனைவி  உறவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

                      சிலர் புதிய நூதனமான தொழில் ,வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். வருமானம் சிறப்பாக இருப்பதாக சொல்ல முடியாது. கொடுக்கல்-வாங்கலில்  குழப்ப நிலை காணப்படும். புதிய நண்பர்கள்  நல்ல மனிதர்கள் உங்களை ஒதுக்குவார்கள். காதில் விழும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு கவலையளிப்பதாகவே  இருக்கும்.  சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு தள்ளிப் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின்  ஆதரவு கிடைக்காது. நல்ல பெயரும், பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் தாமதமாகவும் வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டம் தாய்க்கோ அல்லது தாய்வழி உறவினருக்கோ அல்லது தகப்பனாருடைய தாய்க்கோ உகந்த காலம் அல்ல. அவர்களுக்கு தீய பலன் ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் கேஸ்களுக்கு இழுத்தடிக்கும்.

.

இனி,குரு 10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு  கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை  கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக,  வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும் உடன் பணியாற்றுபவர்களால் துன்பம் வரும். உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் தவறாக எடுத்துச் சொல்லி உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குவார்கள். உங்கள் வேலையாட்கள் கூட உங்களுக்குப் பணிய மறுப்பதால், அவர்களால் ஏற்படும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

இப்படியாக  இந்த ஆண்டு, குரு,சனி, மற்றும் ராகு கேதுக்கள் உங்களுக்கு சாதமில்லாமல் இருப்பதால், நற்பலன்கள் நிகழ வாய்ப்பில்லை. ஆனால், இப்படி அசுப பலன்களாக சொல்லப்பட்டிருக்கிரதே என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. கன்னி ராசிக்குண்டான பொதுப்பலன்கள்தான் இங்கே சொல்லப்படிருக்கின்றன. இது கன்னி ராசிக்காரர் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் பிறந்த ஜாதகம் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஜாத்கப்படி உங்கள் திசா- புத்தி யோகமாக அமைந்து, கிரக நிலைகள் சாதகமாக இருந்தால், இங்கே தரப்பட்டிருக்கும் அசுப பலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது. தொலைகள் மிகவும் குறையும் . எனவேஉங்கள் பிறந்த ஜாதகத்தைப் பரிசீலித்துக்கொள்ளவும்.

பரிகாரம்:

சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து  மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும். சனி ஏழரைச் சனியாக  சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் சந்நிதிக்கு சென்று, எள் தீபம் ஏற்றி, வழிபடவும். காக்கைக்கு தினந்தோறும் அன்னமிடவும். வயதானவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யவும். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’வை தினந்தோறும் பாராயணம் செய்யவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வழிபடவும். வினாயகரை வணங்கவும். வினாயகர் சந்நிதியை சுத்தம் செய்யவும்.

        இந்தப் புத்தாண்டில் இனிது வாழ்க!.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.