/* ]]> */
Feb 242011
 

 

ரஜினி - தனுஷ்

 

1.”ரஜினிகாந்த் மாமனாராக இருந்தபோதும், தனக்கு எந்த அறிவுரையும் சொல்வதில்லை.எந்த டிப்ஸும் கொடுப்பதில்லை. என் போக்கில் நான் போவதே அவருக்குப் பிடிக்கும்.” என்கிறார் தனுஷ்.

2. தமிழருக்கு விரோதியான ராஜபக்ஷேவுடன் கை குலுக்கிவிட்டு வந்த நடிகை அசின் தன்செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவில்லையாம். எனவே இந்து மக்கள் கட்சிக்காரர்கள் அசினை விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ‘ராணா’ என்ற படத்தில் நடிக்க வைப்பதாக இருந்த அசினை படத்திலிருந்து நீக்கிவிடும்படி, உச்ச நடிகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்களாம். மீறி அவரை நடிக்க வைப்பதாக இருந்தால், ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து ஆர்ப்பாட்டம் , மறியல் நடத்துவதாக திட்டமாம்.

 

 

Leka Washington

3.இப்போதுதான் லேகா வாஷிங்டன் பக்கம் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. பணம் பெரிய விஷயமில்லை. கேரக்டர் மட்டும்தான் கனமாக இருக்கவேண்டும் என்கிறாராம்.’கிளாமர்’ என்றால் ஏனிப்படி கூக்குரல் எழுப்புகிறார்கள்? தமிழ்ப் படத்தில் மட்டும்தான் இப்படி. கேரக்டருக்குப் பொருத்தம் என்றால் கிளாமர் அவசியம்தானே! ஒரு வில்லி கேரக்டருக்கு இழுத்திப் போர்த்திகிட்டு நடிக்க முடியுமா? எப்படி நடித்தால் நல்லாயிருக்குமோ அப்படி நடிப்பேன். பக்கத்து வீட்டுப் பெண்ணாகவும் நடிப்பேன்;அப்பாவிப் பெண்ணாகவும் நடிப்பேன். அடிப்பாவி என்று சொல்லக்கூடிய கால்கேர்ல் பெண்ணாகவும் நடிப்பேன், என்கிறாராம்.

 

Andrea Selvaragavan

4. சோனியா அகர்வால் விடை பெற்றுச் சென்றதும், அந்த இடம் நமக்குத்தான் என்ற நம்பிக்கையில் , தனுஷுடன் நடிக்கவேண்டிய காட்சிகளில் ரொம்பவும் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்தாராம்,அந்த நடிகை.செல்வராகவனும் படு குஷியில் இருந்தாராம். ஆனால், கடைசியில் செல்வராகவன் தன் உதவியாளரைக் கல்யாணம் செய்துகொண்டதும் ‘இலவு காத்த ‘ கதையாகிப் போச்சு,காத்திருந்த நடிகைக்கு. ‘பாவம் ஆன்ட்ரியா’ என்கிறார்கள், யூனிட் ஆட்கள்.

5.’ எந்திரன் ‘ படத்தின் கேமரா மேன் ரத்னவேலுவின் உழைப்பு ரஜனியை பிரமிக்கவைத்துவிட்டதாம். அதனால், அவரது நிக்னேம் ‘ராணா’ வை தனது அடுத்த படத்தின் டைட்டிலாக வைத்து விட்டாராம்.

 

Ranjitha - Nithyananda

6. வீடியோ பற்றிக் கடுகளவும் கவலை இல்லையாம், காவியின் நாயகிக்கு. பழைய சினிமா நண்பர்களுக்க்கு உரிமையுடன் போன் போட்டுப் பேசுகிறாராம். ‘இனிமே போன் பண்ணாதே. காக்கி வட்டாரம் என்னையு ம் தூக்கிடும்’ என்று எதிர்முனையில் நடுங்கிப் போகிறார்களாம்.

7. மாமணி விழாவுக்கு ,உச்சத்துக்கும், உலகத்துக்கும் அழைப்பு விடுத்ததாம் பெரிய்ய இடம். பாராட்டு மழை பொழியும் காட்சிகளை தேர்தல் வீடியோவில் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற சங்கதி காதுகளுக்கு வந்ததால், ‘ நோ’ சொல்லிவிட்டார்களாம், இருவரும்.

8. விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நடித்துவரும் படத்துக்கு ‘தெய்வ மகன்’ என்று பெயர் சூட்டினார்களாம். இநதப் பெயரை சிவாஜி பில்ம்ஸ் பதிவு செய்திருப்பதால், ‘பிதா’ என்று மாற்றியிருக்கிறார்களாம்.

 

Shreya Saran

9.’ஸ்ரே’ நடிகைககு புதுப்பட வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறதாம்.ஒரேயடியாக வீட்டில் சும்மா உட்கார்ந்து விடக்கூடாது என்று தனது சம்பளத்தைக் குறைப்பதுடன் இதுவரை காட்டி வந்த மற்ற கெடுபிடிகளையும் குறைத்துக்கொள்வாராம்.

 

10. ‘தவமாக’ படத்தில் அறிமுகமான பிரிய நடிகை மலையாளப் பட உலகில் ‘பிஸி’யாக இருக்கிறார். அங்கே அவர் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறாராம்.ஆனால், தமிழில் ஒருபடம் கூட கைவசம் இல்லையாம். தமிழில் அதிக சம்பளம் கேட்பதால்தான் படவாய்ப்பே இல்லை என்கிறாராம், ஒரு தமிழ்ப் பட அதிபர்.

***********

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>