/* ]]> */
Mar 302013
 

தனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்?:

 

ராகுலின் எதேச்சாதிகாரப் போக்கு வாசனைத் தனிக் கட்சி ஆரம்பிக்கத் தூண்டிவிடுகிறது. துணைத் தலவரானது முதல், ராகுல் தனக்கு மிஞ்சிய தலைவர்கள் பிரதேச காங்கிரஸ் கட்சிகளில் இருக்ககூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். இந்த கருத்தின்படிதான், ஆந்திராவில், ஜகன் மோகன் ரெட்டியை மாதக் கணக்கில் சிறையில் வைத்து தன்னுடைய எஜமான விசுவாசத்தைக் காங்கிரஸுக்குக்  காட்டுகிறதாம் சி.பி.ஐ. அதுபோல தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வாசனுக்குப் பின்னால் இருப்பதை உணர்ந்த ராகுல், வாசனுக்கு முடிந்த மட்டும் தொந்தரவு கொடுக்கத் துவங்கிவிட்டார். யுவராஜாவை வாசனைக் கலந்தாலோசிக்காமல் நீக்கியது மட்டுமல்லாமல், வாசனின் துறையிலுள்ள  கோப்புகளையும் ராகுலின் நெருங்கிய வட்டாரம் ரகசியமாகக் கண்காணிக்கிறதாம்.  எனவே வெறுப்பில் இருக்கும் வாசன், ஆந்திராவில் தந்தையின் பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எனும் தனிக்கட்சி ஆரம்பித்த ஜெகன்மோகன் ரெட்டியைப் போல ‘மூப்பனார் காங்கிரஸ்’ என்று தந்தை பெயரில் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறாராம். அதற்குள் அவரை சமாதானப்படுத்தப் போவதற்கான அறிகுறி ஏதுமில்லையாம்.  ‘தா.மா.க’ என்ற பழைய பெயரில் கட்சி ஆரம்பிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளதாம். என்வே மூப்பனார் காங்கிரஸை விரைவில் எதிர்பார்க்கலாம்.

 

குஷ்பூ தன்னுடைய கணவர் சுந்தர்.சி.யை  அழைத்துக்கொண்டு கலைஞரைச் சந்தித்து தன்னுடைய திருமண நாளில் ஆசி பெற்றாராம்.   முன்கூட்டியே இப்படிப்பட்ட திட்டம் எதுவும் இல்லாமல் இருந்த குஷ்பூவுக்கு அன்று காலையிலேயே கோபாலபுரத்திலிருந்து அழைப்பு வந்ததாம். ஆசி வாங்கப் போன குஷ்பூ தம்பதியரை தயாளு அம்மளையும் அழைத்து ஆசி வழங்கச் செய்தாராம், கலைஞர். இது குடும்பத்தினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாம். ஸ்டாலினின் மணிவிழாவுக்குக்கூடப் போகாத தயாளு அம்மாள்  இப்படி குஷ்பூவுக்கு ஆசி வழங்கியது சின்ன சலசலப்பை ஏற்படுத்தியதாம். ஆனால்,கலைஞர், குஷ்பூவை கட்சியின் ஆக்ஷன் வீராங்கனையாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தகவல்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.