/* ]]> */
Oct 212020
 

தங்கக் கல்லறை

GOLDEN CEMETERY

வடகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு எகிப்து. இங்கு பழங்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் வாழும்போதே பிரமிக்கத் தகுந்த வகையில் கல்லறை அதற்கு ஏகப்பட்ட பொருட்செலவும் செய்தனர். பல்லாயிரம் தொழிலாளரின் கடும் உழைப்பில், அவை உருவாகியுள்ளன. இன்று புராதன வரலாற்றுச் சின்னங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

எகிக்ப்தின் ;ப்அழைய தலை நகர் தபோஸ் நகரம். இது உலகின் மிக நீண்ட நைல் நதிக்கரையோரம் உள்ளது. இங்கு திபோன் மலைத் தொடர் பகுதியில் புராதன கல்லறைகள் உள்ளன.

ஐரோப்பிய தொல்லியல் வல்லுனர்கள் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவற்றை ஆராயத் துவங்கினர். பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பிரமிடுகளைப் பற்றி சிந்தித்தாலே மரணம் நிச்சயம் என மர்மக் கதைகள் உலா வரத் துவங்கின.  அந்தப் பக்கம் போகவே பலர் அஞ்சி நடுங்கினர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஹார்வார்டு கார்ட்டர் துணிச்சலுடன் களம் இறங்கினார். அவரது முயற்சிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த கார்னாவன் நிதி உதவி செய்தார். முதல் உலகப் போர் ஏற்பட்டதால், பணியில் இடையூறு ஏற்பட்டது. மனந்தளராமல் தொடர்ந்தார் கார்ட்டர்.

மணலால் மூடப்பட்டு இருந்த கல்லறையில் நுழைவாயில் போன்ற பகுதி தென்பட்டது. துவாரம் இட்டு நீண்ட கம்பியை செலுத்தினார். அது தடையின்றிப் பாய்ந்தது. புராதன நாகரீக உலகம் அங்கிருந்தது.

அதில் எகிப்திய மன்னன் துட்டன் காமுன் உடல் வைக்கப்பட்டிருந்தது. உப்பால் பதப்படுத்தி, தைலங்கள் பூசி, பாடம் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3,350 ஆண்டுகளுக்கு முன், அந்த உடல் பதப்படுத்தப்பட்டிருக்கலாம். என கணித்தார் கார்ட்டர்.

உடலைத் தாங்கிய தங்கத் தகடு பதித்த பெட்டியும் இர்ஃபுந்தது. அதில் நவர்டத்தினங்கள் வைர மணி மாலைகள் மற்றும் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்த 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன. மன்னனுக்கு சூடப்பட்டிருந்த மலர்மாலையும் வதங்கிய நிலையில் காணப்பட்டது. இது பெரும் ஆச்சரியம் தந்தது..

கார்ட்டரின் கண்டுபிடிப்பின் துணைகொண்டு, சிற்பங்கள், இசைத் தொகுப்புகள், இலக்கியங்கள், திரைப்படங்கள் ஏராளமாக வெளிவந்தன. இவரது துணிச்சலான ஆய்வுக்கு பின்தான் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றிய உண்மைகள் வெளிவந்தன மானுட வளர்ச்சியின் மேன்மையைப் பகிர்ந்தன.

*********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>