/* ]]> */
Oct 172019
 

டோஃப் நட்ஸ்- செய்வது எப்படி?

donuts

தேவை:

சலித்த மைதா மாவு -1 தம்ளர்; ஈஸ்ட், பொடித்த சர்க்கரை- தலா அரை தம்ளர்; தண்ணீர் கலந்த பால்-கால் தம்ளர்;  உருக்கிய வெண்ணெய்-2 மேஜைக் கரண்டி; பேக்கிங் பௌடர்-கால் தேகக்ரண்டி; சாக்லேட் சிரப் மற்றும் நட்ஸ்.

செய்முறை:

பாலை மிதமாக சூடாக்கி ஆற விடவும். இதில் ஈஸ்ட், சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.  இவற்றை மைதா பேக்கிங் பௌடர், வெண்ணெயுடன் சேர்த்து, கையில் ஒட்டாதவாறு, கெட்டியாகப் பிசையவும்.

மெல்லிய துணியில் மூடி 20 நிமிடம் ஊற வைக்கவும். இது இரட்டிப்பாக உப்பி வரும். இதிலிருந்து சிறிது எடுத்து சப்பாத்தி போல தட்டி சிறிய வட்ட மூடியால் வெட்டவும். நடுவிலும் சிறிய வட்டமாக வெட்டுங்கள்.

இதேபோல அனைத்தையும் செய்து ஓவனில்  வேக வைக்கவும். நன்றாக வெந்து உப்பி வந்தபின் இதனை சாக்லேட் சிரப் அல்லது சர்க்கரையைப் புரட்டி அதன்மேல் பொடித்த நட்ஸ் தூவிப் பறிமாறவும்.

^^^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>