/* ]]> */
Sep 072011
 

HUJI- ஹர்கதுல் ஜிஹாதி தீவிரவாத அமைப்பு டெல்லி குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. huji2011@gmail.com மிலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலை ஆராய்ந்து வருவதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தீவிரவாதி அஃப்சல்குருவின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென ஹுஜி அமைப்பு எச்சரித்துள்ளதாக தெரிய வருகிறது. இல்லாவிட்டால் மேலும் பல குண்டு வெடிப்புகள் நிகழும் என்று கூறப்பட்டுள்ளதாம். இந்த அமைப்பின் பெயர் மும்பை குண்டு வெடிப்புகளிலும் அடிபட்டது.

டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உயர் எச்சரிக்கை பேணப்படுகிறது. போலீசார் குவிக்கபபட்டுள்ளனர். தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் ஒற்றுமை காக்கவும் நாட்டு மக்கள் உறுதி கொள்ள வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>