/* ]]> */
Dec 112019
 

டெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா?

டெங்கு கொசு

ஏடிஸ் என்னும் கொசுவால் பரவக்கூடிய வைரஸ் கிருமியால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்றது.நன்னீர் நிறைந்த அணைகலில் மட்டுமின்றி , குளம் போன்ற நீர் நிலைகளிலும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும். ஆனால், இந்த ஏடிஸ் கொசுக்களால் அதிக தூரம் பறக்க முடியாது. அதிக பட்சமாக 150 மீட்டர் மட்டுமே பறக்கும். எனவேதான், , நம் வீட்டைச் சுற்றி\ நமக்கு வெகு நெருக்கமாகவுள்ள நீரில் உற்பத்தியாகும் கொசுவே நமக்கு ஆபத்து. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே மேற்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள காலியிடங்களில் கிடக்கும் டயர்கள், குப்பைகள் , தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் பாத்திரங்கள் , குடம், வாளி போன்ற நீரில் இருந்தும் கொசு உற்பத்தியாகும் என்பதால், , நீரைச் சேமிக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் மூடிவைக்க வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>