டி ஜாங்கோ – விலங்கு உடைபடும் ஓர் அடிமையின் கதை – சிவா
ஆங்கிலப் படங்களின் வகைப்பாடுகளுக்கு பங்சமில்லை. ஆக்ஷன்,திகில்,நகைச்சுவை,காதல்,
அப்படி ஒரு படம்தான் Django Unchained அமெரிக்கப்படம். 180 நிமிடங்கள் ஓடும் இப்படம். நம்மை அடிமைகள் வியாபாரம் நடந்த 18ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்கு அழைத்துச் செல்கிறது. Django என்பவன் ஓர் அடிமைதான். அவனது விடுதலைக் கதைதான் இப்படம்.
விற்கப்பட்ட அவன் எப்படி தன்னையும் தன் மனைவியையும் அநியாயக் கும்பலிடமிருந்து மீட்கிறான். அவனுக்கு ஜெர்மனியிலிருந்து ஒரு டாக்டர் எப்படி உதவுகிறார் என்பதே கதை.அடிமைகளை வியாபாரிகள் நடத்திய கொடுமைகள் படத்தில் காண்பவரை கதிகலங்க வைக்கும். இப்போது மிருகங்களை துன்புறுத்தி வதை செய்வதைத் தடுக்கக்கூட மிருகவதை தடுப்புச் சட்டம் இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனை மனிதன் எவ்வளவு இழிவாக கொடுமையாக நடத்தினான் என்பதை படம் பார்க்கும் போது உணர முடியும். அடிமைகள் வியாபாரத்தின் பின்னணியில் இருக்கும் ரத்தம் தோய்ந்த வரலாற்றை டி ஜாங்கோ படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இயக்கியிருப்பவர் க்யன்டின் டேரன்டினோ (Quentin tarantino) இவரே திரைக்கதையும் எழுதியுள்ளார்.
ஜேபிஃபாக்ஸ் தான் டி ஜாங்கோவாக நடித்துள்ளார். லியானார்டோ டி கேப்ரியோ,கெர்ரி வாஷிங்டன், க்ரிஸ்டாப் வால்டஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பரபரப்பான வரவெற்பு கிடைத்தது. வணிக ரீதியில் 365 மில்லியன் டாலர்களைக் குவித்தது. இதன் இயக்கிய இயக்குநரின் ஆகச் சிறந்த வெற்றிப்படமாக Django அமைத்தது.
Django என்று அறியப்பட்ட இப்படத்தின் முழுக் பெயர் Django Unchained கட்டறுக்கப்பட்ட விடுதலை செய்யப்பட்ட விலங்கறுபட்ட தடைகளை உடைத்த ஓர் அடிமையின் கதை என்று பொருள்படவே இப்படி பெயர் வைத்துள்ளார்.
இப்படத்துக்கான விமர்சனங்கள் அதிக வன்முறை கொண்ட படம் கடந்த காலம் பற்றிய பீதியை ஊட்டியபடம் என்றெல்லாம் பேசப்பட்டது. இருந்தாலும் வெட்கித்தலை குனிய வேண்டிய இருட்டான நம் பழைய பக்கங்களை இக்கால தலைமுறையினர் புரட்டிப் பார்க்கட்டும் என்றும் ஆதரவுக் குரலும் எழுந்தது.
ஐந்து அகடமி விருதுகள் பெற்றிருப்பதே இப்படத்தின் தர நிர்ணயத்துக்கும் படைப்பின் போது தீவிர ஈடுபாடு கூட்டியதற்குமான சான்றுகள் எனலாம்.
சிறந்த அசல் திரைக்கதை,சிறந்த துணை நடிகர் உள்பட இரண்டு ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்ற படமிது.
அதே போல சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் க்ளோப் விருதுகளும் இப்படத்துக்குத் கிடைத்தன. அதுமட்டுமல்ல BAFTA விருதும் கிடைத்தது.
அடிமையை மீட்க உதவும் ஜெர்மன் காரராக வரும் நடிகர் க்றிஸ்டாப் வால்ட்ஸ் பரவலான பாராட்டுகளையும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் அள்ளிட இப்படம் உதவியது. இவர் ஏற்றது துணை நடிகர் வேடம் என்றாலும் பாராட்டுகளைக் குவித்தார்.
அடிமைகளின் அடிமை வாழ்க்கையின் பாதை மற்றும் பயணத்தை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம் ‘டி ஜாங்கோ’ தென் மேற்கு உலகத்திலிருந்து மேலை நாட்டுக்கு பயணம் செய்யும் இக்கதை பலவித வடுக்கலை கண்முன் நிறுத்தும்படி இருக்கும்.
‘டி ஜாங்கோ’ வரும் வெள்ளி முதல் இந்தியாவில் வெளி வருகிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
Sorry, the comment form is closed at this time.