Jun 122020
ஜெல்லி மிட்டாய்- செய்வது எப்படி?
தேவை:
சர்க்கரை-1 தம்ளர்; ஜெலட்டின்-25 கிராம்; ஸ்ட்ராபெரி, வென்னிலா மற்றும் அன்னாசி ஃபுட் கலர் மாற்றும் எஸ்ஸென்ஸ்- தலா சில துளிகள்;
செய்முறை:
ஜெலட்டினை தண்ணீரில் ஊற விடவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகும்வரை கரைத்துக் கொண்டே இருக்கவும்.
கலவை பாகு பதத்தில் தயாரானதும் மூன்று பங்குகளாகக் கிண்ணத்தில் எடுக்கவும். அவற்றில் ஃபுட் கலர் எஸ்ஸென்ஸ் சேர்த்துக் கலக்கவும், இதனை மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீஸரில் 10 நிமிடம் வைத்து எடுத்து சர்க்கரையில் பிரட்டவும்.
கலர்ஃபுல்லான ஜெல்லி மிட்டாய்களை குழந்தைகள் விரும்புவர்.
**************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments