/* ]]> */
Dec 152011
 

 மீண்டும் தயாரிப்பாளருக்கு ஃபோன் போடும் நடிகை சோனா

  • சோனா
  • சோனா நடிகர் வழங்கிய விருந்து ஒன்றில் சர்ச்சையில் சிக்கிய சோனா பல ஊர்களுக்கு சென்று வந்து தற்போது சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனமாட சான்ஸ் கேட்டு முன்னணி டான்ஸ் மாஸ்டர்களிடம் ,போனில் கோரிக்கை வைக்கிறார். தயாரிப்பாளர்களிடமும் ஃபோன் போட்டு ஸபெஷல் விருந்துக்கு அழைக்கிறார். ஆனால் போன தடவை சோனா பிரஸ் மீட்டில் போட்ட போடில் யாருக்கும் தில் இல்லை.
annakodiyum kodiveeranum

annakodiyum kodiveeranum

To read this hot tamil cinema news in English click here

 ‘அன்னக்கொடியும் கொடிவீரனும் ‘ பட பூஜைக்கு முந்நாள், இந்நாள் துணை டைரக்டர்கள் அனைவரும் ஆஜர். ஆனால், மனிவண்ணன் மட்டும் மிஸ்ஸிங். ”என்னைக்கூப்பிடக்கூடாது  என்று நினைப்பவரல்ல எங்க டைரக்டர். அலுவலகத்தில் உள்ளவர்கள் மறந்திருப்பார்கள். இதெல்லாம் ஒரு மேட்டரா? விடுங்க” என்றாராம், மணி.

 

கலைஞரின் பேரன்களில் ஒருவர், அருள்நிதி. இவர் ‘வம்சம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ‘மௌனகுரு’ என்னும் படத்தில் நடிக்கிறார். ‘வாகை சூடவா’ நாயகி இனியா இவரிடன் ஜோடியாக நடிக்கிறார். இவருடைய தந்தை தமிழரசு, 20 வருடங்களாக சினிமா தயாரிக்கிறார். அருள்நிதி மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவராம்.” சினிமாவையும் அரசியலையும் ஒன்றாகப் பார்க்காதீர்கள்.”என்கிறார். மேலும், ”அரசியல் மாற்றம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது” என்கிறார்.

 

 

ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் நம்ம ஹீரோ கார்த்திக் கலந்துகொண்டார். அங்கு ஒரு தொகுப்பாளினி “ உங்களுக்கு அதிகம் பிடித்தது தெலுங்கு ரசிகர்களா; அல்லது தமிழ் ரசிகர்களா” என்ற ஒரு கேள்வியைக் கேட்டார். “ எனக்கு தெலுங்கு ரசிகர்களைத்தான் அதிகம் பிடிக்கும். ஏனென்றால் அவர்கள்தான் தியேட்டர்ல சீனுக்கு சீன் கைதட்டி ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டில் இதைப் பார்க்க முடியாது. “ என்று கூறியது சர்ச்சையாகியது. அதற்கு பதிலளித்த கார்த்திக், “ தமிழ் சினிமா உலகம் எனக்கு அம்மா அப்பா மாதிரி. அவுங்க இல்லேன்னா நான் இல்லை. தமிழ்நாடு என் வீடு. வீட்ல இருக்கறவங்க என்னைப் பாராட்டுறது இயல்பு. ஆனா தெலுங்கு ரசிகர்கள் பக்கத்து வீடான ஆந்திராக்காராங்க. அங்கு நான் ஒரு புதுமுகம். 3 படத்தில்தான் நடித்திருக்கிறேன். அவுங்க ரசிக்கிறாங்கங்கறதை மதிக்கிறேன்னு சொன்னேன். மத்தபடி தப்பா எதுவும் பேசலை” என்றார்.

Genelia

Genelia

 

தனது சினிமாப் பிரவேசம் திட்டமிட்டதல்ல, என்கிறார், ஜெனிலியா. ஒருமுறை ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருங்த ஒரு விளம்பர படத் தயாரிப்பாளர் மூலம் மாடலிங் வாய்ப்பு கிடைத்து சினிமா- என்ட்ரி கிடைத்தது. நான் இதற்காக திட்டமிடவில்லை,இது எதிர்பார்க்கப்படவுமில்லை என்கிறார். ஜெனி.

பார்த்திபன்

பார்த்திபன்

அந்த உச்ச டைரக்டர் தனது ‘கொடி’ படத்தில் நடிக்கவிருந்த ‘புதியபாதை’ நடிகரைத் தூக்கிவிட்டு பருத்தி வீரனை நடிக்க வைக்கப் போகிறாராம்.  இது திட்டமிட்டதுதான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம். இதன்மூலம் வீரனுடன் தனக்கு ஏற்கெனவே இருந்த மனஸ்தாபம் தீர்வதோடு, இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப படத்தை பிரம்மாண்டமாக கொண்டுவர முடியும் என நினைக்கிறாராம்

tags : tamil cinema hot news on latest tamil movies, hot tamil actress and heroes of south indian film industry, சோனா, கார்த்திகா நாயர், அன்னக்கொடியும் கொடிவீரனும், பாரதிராஜா, பார்த்திபன், ஜெனிலியா,  genelia, parthiban, bharathiraja, karthika nair, sona, actress, tamil actress,  நடிகை, நடிகை விருந்து,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>