/* ]]> */
Jan 132012
 

சேத்தன் பகத் – நண்பன் படத்தின்

உண்மையான ஹீரோ

 

chetan bhagat  சேத்தன் பகத்

chetan bhagat சேத்தன் பகத்

இப்போது பொங்கல் திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நண்பன் படம் ஹிந்தி 3 இடியட்சின் ரீமேக்.  வட இந்தியாவின் திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட திரைப்படம் 3  இடியட்ஸ் (3 idiots) இது பைவ் பாயிண்ட் சம்வொன் (five point someone) எனற ஆங்கிலநாவலின் கதை. இந்த நாவலின் 37 வயது நிறம்பிய இளம் கதாசிரியர் சேத்தன் பகத் . இந்தியர்களிடம் மிகவும் பிரபல்யமாக அறியப்படும் இளம் ஆங்கில எழுத்தாளர்களின் வரிசையில் சேத்தன் பகத் இருக்கிறார். இவர் புது டில்லியில் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ந்தேதி பிறந்தார்.இவர் பஞ்சாப் இனத்தை சேர்ந்தவர். இவர்   தந்தை ராணுவத்தில் பணியாற்றினார்.இவர் தாயார் விவசாய துரையில் அரசு பணியாளராக இருந்தார். இவர் டில்லியில் உள்ளஆர்மி பப்ளிக் பள்ளியில் கல்வி பயின்றார்.

டில்லியில் உள்ள டவ்லா கொன்னில் (dhaula kuan) டில்லி இந்திய தோழில் நுட்ப கழகத்தில் (IIT) மெக்கானிக்கல் பொறியியல் பயின்றார். பிறகு அஹமதாபாதில் உள்ள (IIM) இந்திய மேலாண்மை நிறுவனத்தில் MBA பயின்றார். அவர் அங்கு சிறந்த மாணவர் என்ற பட்டமும் பெற்றார்.  அவருடைய மேற்படிப்பை முடித்தவுடன் ஹாங்காங்கில் முதலீட்டு வங்கியில் 11 வருடங்கள் பணி புரிந்தார். அவர் வங்கி  பணியில் இருக்கும் பொழுதே தன் முதல் மூன்று புத்தகங்களை எழுதினார். எழுத்தின்  மேல் உள்ள பேரார்வத்தால் தன் வங்கி பணியை உதரிவிட்டு மும்பை வநதார்.இவரின் படைப்புகள் மொத்தம் ஐந்து புத்தகங்களே ஆகும். இவரது மனைவி அனுஷா சூரியநாராயணன், தமிழ் நாட்டு பெண். 1998 வருடம் அவரை காதல் மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சியாம், ஈஷான் என்று இரண்டு புதல்வர்கள்.இவரின் 2 states: The story of my Marriage, இவரது காதல் கதையின் தழுவலே ஆகும். 2004 ஆம் வருடம் five point someone என்ற புத்தகத்தையும், 2005ஆம் வருடம் one night @the call center என்ற புத்தகமும், இது hello என்று வடமொழியில் திரை படமாக உருவானது.2008 ஆம் ஆண்டு The 3 Mistakes of My Life என்ற புத்தகத்தையும், 2009  ஆம் வருடம் 2 States: The Story of My Marriage, 2011ஆம் வருடம் Revolution 2020: Love, Corruption, Ambition என்ற புத்தகமும் எழுதியுள்ளார். இவர் ஸ்டார் நியூஸ் தொலைகாட்சியில் நீதிபதியாக ஒரு ரியாலிட்டி ஷோவில் தலமைவகித்தார். SPARK  என்ற தலைப்பில் பூனாவில் MBA முதல் வருட மாணவர்களுக்கு சார்பு நிரல் வழங்கினார்(orientation program)

அவர் எழுதிய கதைதான் 3 இடியட்ஸ் நண்பன் படங்களின் மூலம். உண்மையில் இந்த படங்களைப் பார்த்தால் அதன் வித்தியாசமான கருதான் படத்தின் உண்மையான ஹீரோ என்பது புரியும்.. அப்படிப் பார்த்தால் 3 நண்பன் படத்தின் உண்மையான ஹீரோ சேத்தன் பகத் தானே !

- மாதவி

tags : 3 idots and tamil movie nanban story writer chetan bhagat profile and life history in tamil, chetan bhagat, சேத்தன் பகத், எழுத்தாளர், 3 இடியட்ஸ், நண்பன், நண்பன் கதை,  nanban story writer, chetan bhagat, சேடன் பகத்,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>