/* ]]> */
Sep 062010
 

தேவையான பொருட்கள்:[SERVES 4-5]
*நன்கு கொத்திய ஆட்டுக்கறி  1/2கி
*சோம்பு                                              1tbsp
*சீரகம்                                                 1tbsp
*பட்டை                                               2துண்டு
*ஏலம்                                                   2-4
*கிராம்பு                                               2-4
*பூண்டு                                                 2
*இஞ்சி                                                  1துண்டு
*பொட்டுக்கடலை                           2-4tbsp
*கசகசா                                                1tbsp
*மஞ்சள் தூள்                                     1tsp
*மிளகாய் தூள்                                  2tsp
*பச்சை மிளகாய்                              4-6
*சின்ன வெங்காயம்                        1/2கப்
*தேங்காய்                                           1/2 மூடி
*உப்பு                                                      தேவைக்கு ஏற்ப
செய்முறை:அனைத்துப் பொருட்களையும் அப்படியே  அரைக்கலாம் அல்லது இருப்பு  சட்டியில் எண்ணெய் விட்டு வதக்கியும் அரைக்கலாம்.பொட்டுக்கடலை அதிகமாகி விட்டால் கோலா உருண்டை கடினமாகி விடும்.கவனம் தேவை.தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து வைத்துக்கொண்டு,உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சூப்பரான கோலா உருண்டை ரெடி.அப்படியே சாப்பிட்டால் உலகையே மறக்கச் செய்யும்.குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.
குழம்பு:
தேவையான பொருட்கள்:
எலும்பு                      1/4கி[வேகவைத்துக் கொள்ளவும்]
சி.வெஙகாயம்        1/2கப்,தக்காளி-1

குழம்புக்கு அரைக்க:
மிளகாய் தூள்                 2tbsp
மல்லித்தூள்                   2tbsp
மஞ்சள் தூள்                   1tsp
கரம் மசாலா                   1tsp
சோம்பு                              1tsp
சீரகம்                                 1tsp
தேங்காய்                         2-3கீற்று[விருப்பப்பட்டால்]
சின்ன பூண்டு                 1
சி.வெங்காயம் 1/2கப்,தக்காளி-1,இவ்விரண்டையும் சிறிது வதக்கி ,அனைத்தையும் ஒன்றாக போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
குழம்பு சட்டியில் 2tbsp எண்ணெய் விட்டு சி.வெங்காயத்தையும்,தக்காளியையும் போட்டு நன்கு வதக்கிய பின் ,அரைத்து
வைத்துள்ள மசாலாவை போட்டு வதக்கி,வேக வைத்துள்ள எலும்பை அத்துடன் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.பிறகு கோலா உருண்டையை லேசாக வறுத்தும் போடலாம்,வறுக்காமலும் போடலாம்.உருண்டை வெந்ததும்.சிறிது எண்ணெய் விட்டு சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு
தாளித்து இறக்கவும்.கோலா உருண்டையை எலும்புடன் சேர்த்து வைத்தால் தான் ருசியாக இருக்கும்.1/2கி கறி கொத்தி வாங்கினால் பாதி உருண்டையை குழம்பில் போட்டு விட்டு மீதியை வறுத்து சாப்பிடலாம்.சாப்பிட்டு விட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.
diet-B
:


ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>