/* ]]> */
Jun 092016
 

செட்டிநாடு பால் பணியாரம்:

செட்டிநாடு பால் பணியாரம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி, உளுந்து தலா 1 கப்;பால்-அரை லிட்டர்; திக்கான தேங்காய்ப்பால்-1 டம்ளர். சர்க்கரை-1 கப்; ஏலக்காய்த்தூள்-1 ஸ்பூன்; எண்ணெய்-பொறிப்பதற்கு; உப்பு-1 சிட்டிகை.

செய்முறை:

பச்சரிசி உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.மாவு கெட்டியாக இருக்கவேண்டும். பாலைக் காய்ச்சி, இறக்கி சிறிது ஆறியதும்., தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், சேர்த்துக் கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, பொறித்தெடுக்கவும். இதைக் குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பொறித்துவைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்துப் பறிமாறவும்.

குறிப்பு:

மாவு புளிக்கக்கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்து விடவும். பணியாரத்தை  பாலில் அதிக நேரம் ஊற விடக்கூடாது.  பறிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும். விருப்பமனால், முந்திரி, பாதம் சேர்த்துக் கொள்ளலாம்.

^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>