Jun 242019
சூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன?
ஒரு விளக்கின் அருகே நிற்கும்போது ஒளி கூடுதலாகவும் தொலைவு செல்லச் செல்ல ஒளி மங்கியும் போகிறது. அது போல சூரியனுக்கு அருகே விண்வெளி பிரகாசமாகவே இருக்கும். ஆனால், சூரியனிலிருந்து தொலைவு செல்லச் செல்ல பிரகாசம் குறையும். சூரியனுக்கு அருகில் இருக்கிற விண்மீன் ப்ரோசிமா சென்டாரி (Proxima Centari) அங்கிருந்து ஒளி நம்மை வந்து அடைய, சுமார் 4.2 ஆண்டுகள் ஆகும். இரண்டு விண்மீன்களுக்கும் இடையில் சூரிய ஒளியும் புரோக்சிமா சென்டாரியின் ஒளியும் மிக மங்கலாகவே இருக்கும்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments