/* ]]> */
Sep 112013
 

சீமானுக்கு கல்யாணம்:

kayalvizi

கடந்த ஞாயிற்றுக் கிழமை செப்டெம்பர் மாதம் 8ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்றது. மணப்பெண்ணின் பெயர் கயல்விழி. இந்தத் திருமணத்துக்கு வேறெதற்கும் இல்லாத முக்கியத்துவம் கிடைத்தது. சீமான் ஒரு நடிகர், இயக்குனர் என்பதாலோ, அவர் ஒரு அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்பதாலோ அல்ல. மணப் பெண் கயல்விழி மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் என்பதாலும் அல்ல. கயல்விழி ஒரு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும் போராளி என்பதால் இந்த திருமணத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது.
திருமணத்துக்கு பலப் பல அரசியல் பிரமுகர்களும் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். வைக்கோ, பழ நெடுமாறன், தமிழருவி மணியன், நடிகர் சத்யராஜ் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவில், வி.ஐ.பி.க்களின் கூட்டம் அலைமோத, மங்கல நாண் அணிவிகக்ப்பட்டது. ஒரு தங்கச் சங்கிலியில் ‘அ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்டு அதனை, சீமான் மணப்பெண்ணின் கழுத்தில் அணிவித்தார். இந்த ‘அ’ என்பது என்னவென்றால் இந்த ‘அ’ எழுத்தைப் பொறித்த சங்கிலியைத்தான் விடுதலைப் புலிகள் தங்கள் திருமணத்தில் தாலியாக அணிவிப்பார்களாம். அந்த முறையே இங்கும் பின்பற்றப்பட்டது. இதுவே இந்தக் கல்யாணத்தின் ஹைலைட்டாகவும் அமைந்தது. இந்தக் கல்யாணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ,சாதாரணமாக ஒரு கல்யாணம் என்பது இரு மனிதர்களுக்கிடையே நிகழும். ஆனால், இந்தத் திருமணமோ, அதையும் தாண்டி, இரு கொள்கைகளுக்கிடையே நடந்தது, என்பதே முக்கியமான விஷயமானது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>