சீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது? வேறு கட்சிகள் உருவாகவில்லையா? அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா?
சீனாவி;ல் தேசிய அளவில் ஒரே ஒரு கட்சிதான் அதிகாரத்தில் இருக்க முடியும். அது சீன கம்யூனிஸ்ட் கட்சி.
உங்களுக்கு ஒரு செய்தி ஆச்சரியமாக இருக்கலாம் சீனாவில் 8 சின்ன சின்ன கட்சிகள் உள்ளன. இவை இணைந்து ‘ஐக்கிய முண்ணனி என்ற பெயரையும் கொண்டுள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் கிடையாது. அவற்றிலிருந்து சிலவற்றை கம்யூனிஸ்ட் கட்சி தேர்ந்த்தெடுத்து போனால் போகிறது என்று தேசிய மக்களவையில் சேர்த்துக்கொள்ளும்.
சீனாவில் அரசியல் அமைப்பு சட்டம் (அப்படியும் ஒன்று உண்டு.) இப்படிக் கூறுகிறது. ‘பிற கட்சிகள் மகம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசனையை ஏற்க வேண்டும். இந்த நிலை வருங்காலத்தில் பல ஆண்டுகள் தொடரும் பிறகு எப்ப்டி மீதிக் கட்சிகள் வளார முடியும்?
போதாக் குறைக்கு சீன அதிபர் தம் வாழ் நாள் முழுதும் அவரே அதிபராக தொடர்வார் எனும்படி சட்டத்தை திருத்திக்கொண்டு விட்டார். இதற்கு முன் ஒருவர் 2 முறைதான் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முடியும் என்றாலும் சீன அரசின் போக்கை கணிசமானவர்கள் இப்போது தட்டிக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
*************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments