/* ]]> */
Mar 172020
 

சில வகை ஜெல்லி மீன்கள்  இறவாத நிலையில் இருப்பது எப்படி?

JELLY FISHES IN A DEATHLESS CONDITION

சாவே இல்லாத உயிரினம் டார்ரிடோப்ஸிஸ் டோஹ்ரினி (Tarritopsis  dohrini ) எனும் ஒருவகை ஜெல்லி மீன் என்கிறார்கள். பிறப்பு இருந்தால் மரணமும் இருக்கும் என்பது எல்லா உயிர்களுக்கும் பொருந்தாது.

ஆனால், பல செல் உயிரிகளில் இது சாத்தியம் இல்லை. நாம் நம் தாய் வயிற்றில் இருந்தபோது  முதலில் வெறும் ஒரே ஒரு செல்லாகவே இருந்தோம் . அந்த செல்தான் பாக்டீரியா போல பல்கிப் பெருகியது. குறிப்பிட்ட கட்டத்தில் ஒவ்வொரு செல்லும் ஏதாவது ஒரு உறுப்பு செல்லாக மாறிவிட்டது. இதுதான் பாக்டீரியாவுக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம்.

மற்ற ஜெல்லி மீன்களைப் போலவே டர்ரிடோப்சிஸ் டோஹ்ரினி ஜெல்லி மீனும் லார்வா புழு, நிலையிலிருந்து வாழ்வைத் தொடங்குகிறது. முதிர்ந்த தாய் வெளியிடும் லார்வா புழு, கடலின் அடியில் சென்று எங்காவது பற்றிப் பிடித்துக்கொள்ளும். அந்த லார்வாவிலிருந்து பற்பல பாலிப்கள்  ஜெல்லி மீனின் பற்பல உடற் பாகங்களாக வளர்கின்றன.

அதன் முதிர்ச்சி நிலைக்கு முன் ஆபத்து ஏற்பட்டால், தன் வளர்ச்சிப் போக்கைத் திசை திருப்பி பின்னோக்கி வளரும். அதாவது பிறந்த குழந்தை மறுபடி கருவாக மாற்றம் கொள்வதுபோல இவ்வாறு இந்த ஜெல்லி மீன் மாறுவதற்கு அதன் செல்களில் சிறப்புத் தன்மை இருக்கிறது. இதன் ரகசியம் இன்னமும் புரியாத புதிர்தான். இந்த ரகசியத்தை அறிந்துகொண்டால், மனிதர்களின் நினைவு, மறதி போன்ற  பல நோய்களைக் குணப்படுத்திவிடலாம் எனக் கருதி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனலும் வேறு ஒரு மீன் வந்து ஜெல்லி மீனைச் சாப்பிட்டு விட்டால், அந்த ஜெல்லி மீன் மடிந்துவிடும் என்றாலும், இவற்றால் பல ஆண்டுகள் இளமையுடன் வாழ முடியும்.

**************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>