/* ]]> */
Sep 012011
 

பிள்ளைமை!

குருவிக்குஞ்சு

திருடப்போன இடத்தில்

ஏமாற்றம்

சின்னுவுக்கு..

பாம்பொன்று முந்திக்கொண்டது.

வீடு திரும்பும் வழியெங்கும்

அவன்

கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது..

தாய்க்குருவியின்

சோகம்.

 

கள்ளமறியோம்!

“ஊஞ்சலில் வைத்தெனை ஆட்டு ”

எனப்பணித்த..

அடுத்த வீட்டுக்குழந்தையை,

மடியிலமர்த்தி,

ஆடிக்கொண்டிருக்கிறேன்.

உறங்கி விட்டிருக்கும்

அதன்

இதழ்க்கடையில்

வழிந்து கொண்டிருக்கிறது..

உலகின் மீதான

பிள்ளைமையின் நம்பிக்கை.

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>