/* ]]> */
Apr 202014
 

சினிமா விமர்சனம் -மான் கராத்தே:

karaththe
வேலையில்லாமல் ஊரைச் சுற்றித்திரியும் விடலைப் பையன் சிவகர்த்திகேயனை, இதில் சீரியஸான குத்துச் சண்டை வீரனாக்கும் முயற்சி நடந்திருக்கிறது. காமெடி இயல்பாக வரும் சிவா, அழுத்தமான கேரக்டரில் வருகிறார். அவர் பங்குக்கு சோடை போகவில்லைதான். ஆனால், எந்த அளவுக்கு இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் எடுபடும் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரக்டரை மட்டும் பார்க்காமல், மொத்தக் கதையையும் பார்ப்பது நல்லது.
கிடைத்த சான்ஸை சிவகார்த்திகேயன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.ஹீரோக்களின் அடையாளமான நடனம், வேகம், ஸ்டைல் எல்லாம் இவரிடம் இருக்கிறது. பெரிய ஹீரோக்களுக்குக்கூட அகப்படாத அறிமுகக் குத்துப்பாட்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. வெளுத்துக் கட்டியிருக்கிறார், கார்த்தி. எல்லா பாடல்களிலும் களை கட்டும் டான்ஸ். நிச்சயம் டிஸ்டிங்க்ஷன்தான். நட்சத்திர மிமிக்ரியில் கலாட்டா பண்ணுகிறார். ஆனால் பாக்ஸிங் தெரியாது என உயிருக்கு மன்றாடும் காட்சியில் உருக வைக்கிறார். ஆனால், இயக்குனர் அளவுக்கு அதிகமாக பாக்ஸிங் போட்டியில் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்.
நடிப்பைப் பொறுத்தவரை, குறைசொல்லமுடியாத அளவையும் தாண்டிவிட்டார், சிவா . விட்டேத்தியாக அலட்சியங்களைக் கொட்டி நடக்கும் நடையும் , பாவனையும், அலம்பலும் என்று ஜமாய்க்கிறார்.
ஹன்ஸிகா இளைத்து, எடை குறைந்து காணப்படுகிறார். பாடல் காட்சிகளில் நெருக்கமான காட்சிகளில் அழகு கூடுகிறது. சிவகார்த்தியின் காதலை ரகசியமாக ரசிப்பதும், நேரில் பட்டாசாக வெடிப்பதுமான நல்ல நடிப்பு. இறுதிக் காட்சியில் கதறி அழுது குத்துச் சண்டையிலிருந்து சிவாவை விலகச் சொல்லும் காட்சியில் பரவாயில்லை. இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள் இப்படி ஒரு கதை நடப்பது சாத்தியம்தானாஎன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. காமெடி சோபிக்கிறது. பாடல்கள் இனிமை. அனிருத் படத்திற்கு பெரிய டானிக். சுகுமார் ஒளிப்பதிவும் அபாரம். காமெடியை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் அவ்வப்போது சீட்டில் நெளியாமல் இருந்திருக்கலாம்.
ஒருமுறை பார்க்கலாம்!
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>