சினிமா:
மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா:
அவன்-இவன் படத்தில் ஏற்கெனவே விஷால்- ஆர்யா இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் அப்படம் ஓடாததால், அதையடுத்து இணைந்து நடிக்க கதைகள் கிடைத்த போதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. ஆனால், ‘பாண்டி நாடு’ படத்தை அடுத்து, மீண்டும் விஷாலை இயக்கவிருக்கும் சுசீந்திரன் , அப்படத்தில் ஆர்யாவை ‘கெஸ்ட்’ ரொலில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், விஷால் குறுக்கிட்டு, ‘கெஸ்ட் ரோல் வேண்டாம். ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கவைக்கலாம்’ என்று கூற, இப்போது இரண்டு கதாநாயகன் போன்று, அந்தக் கதையை மாற்றிக்கொண்டிருக்கிறார், சுசீந்திரன்.
தனுஷைத் துரத்தும் மகிமா:
சாட்டை மற்றும் மொசக் குட்டி உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை மகிமா. சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் இவர், ஒருமுரை தனுஷை சந்தித்து, தனக்கு நாயகி வேடம் தருமாறு வெளிப்படையாகக் கேட்டார். ஆனால் தனுஷ் ‘என்னுடன் நடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை’ என்று கூறி வெற்றி மாறனுடன் இணைந்து நடிக்கும் ‘ காக்கா முட்டை’ படத்தைத் தொடர்ந்து, தான் தயாரிக்கும் புதிய படமான ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படத்தில் மகிமாவுக்கு நாயகி வேடம் கொடுத்துள்ளார். இருப்பினும் , ‘இது என் தற்காலிக சந்தோஷம்தான் உங்களுடன் டூயட் பாடும் வரை ஓய மாட்டேன் துரத்திக்கொண்டே இருப்பேன்’ என்று தன் மன நிலையை அவரிடம் வெளிப்ப்டுத்தியுள்ளார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments