/* ]]> */
Jan 212015
 

சினிமா:
தெலுங்கு சினிமாவில் நுழைகிறார், தனுஷ்:

Dhanush
தமிழைத் தொடர்ந்து, இந்தியிலும் நடித்துவரும், தனுஷுக்கு அடுத்தபடியாக, தெலுங்கு சினிமாவிலும் காலூன்ற வேண்டும் என்ற ஆசை ஏறபட்டிருக்கிறது. சமீபத்தில் ‘சுப்ரமண்யம்-பி டெக்’ என்ற படத்தின் ஆடியோ விழாவில் கலந்துகொண்ட அவர், தன் ஆசையை வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதோடு இதுவரை நான் ஜாலியான ரொமான்டிக் ரோல்களில்தான் அதிகம் நடித்திருக்கிறேன். ஆனால், அமிதாப் பச்சனுடன் நடித்துவரும் ‘ ஷமிதாப்’ படத்தில் சீரியஸான ரோலில் நடிக்கிறேன். அதனால், இதையடுத்து, அந்த மாதிரி வித்தியாசமான கதபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன், என்றும் தன் மன நிலையை தெலுங்கு இயக்குனர்கள் முன் வைத்திருக்கிறார், தனுஷ்.
ஹன்சிகாவின் திடீர் முடிவு:

HANSIKA
பல படங்களில் சிங்கிள் ஹீரோயினாக நடித்து வந்தபோதும், சில படங்களில்’ டபுள் ஹீரோயின் ரோலிலும் நடித்துள்ளார், ஹன்சிகா. ஆனால், அப்படி நடித்த படங்களில், இவரது வேடங்களை டம்மி செய்து வந்ததால்’ இனிமேல் டபுள் ஹீரோயின் வேடத்தில் நடிப்பதில்லை’ என்று முடிவெடுத்திருக்கிறார். ஹன்சிகவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமே தற்போது விஜயுடன் அவர் நடித்து வரும் ‘மாரீசன்’ படம்தான். ஆரம்பத்தில் , விஜய் படம் என்பதால், அந்த வாய்ப்பை கைப்பற்ற கடும் முயர்சி எடுத்த, அவர் இப்போது. ‘இந்த மாதிரி ஒரு கேரக்டர் ரோலுக்கா இப்படி மெனக்கெட்டேன்’ என்று ‘பீல்’ செய்து கொண்டிருக்கிறார்.
எமிக்கு இனி வசந்த காலம்!:

emi
‘ மதராச பட்டணம்’ படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டன் தேவதை எமி. அதன் பின், ‘ தாண்டவம்’ படத்திலும் ஓரிரு ஹிந்தி, தெலுங்குப் படங்களில் தலை கட்டினார். ஆனாலும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை இதனால், மூட்டை முடிச்சுகளுடன் பிரிட்டனுக்குத் திரும்ப எண்ணியிருந்த எமிக்கு ‘ஐ’ படத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடித்தது. முழு மூச்சாகவும் அர்ப்பணிப்பு உனர்வுடனும் அந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்துக்குப் பின் அவருக்கு தமிழில் மட்டுமில்லமல், இந்தி தெலுங்கிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிகின்றன. இதனல், சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் எமி ‘இந்திய திரையுலகை ஒரு கை பார்க்காமல் விடப் போவதில்லை’ என இங்கேயே டேரா போட்டுவிட்டார். இனி எமியின் எதிர்காலம் வசந்தகாலம் தான்.
^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>