/* ]]> */
Sep 132014
 

சிவ கார்த்திகேயனின் சம்பளம்:

SIVAKARTHIKEYAN
சிவகார்த்திகேயன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்த்ல் நடித்துக்கொண்டிருக்கும்போது, லிங்குசாமி அவருடன் தன்னுடைய படத்துக்காக 1 கோடி ரூபய்க்கு அக்ரிமென்ட் போட்டிருந்தார். அதன்பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘மான் கராத்தே’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பின், சிவ கார்த்திகேயனின் சம்பளம் 8 கோடியை எட்ட்விட்டது. ‘டாணா’ படம் முடிவடையும் தறுவாயில் இருந்தபோது லிங்குசாமி தன் படத்துக்காக நினைவுறுத்தியபோது, சிவா தன்னுடைய ரேட்டை 8 கோடிக்கு உயர்த்தினார். ஆனால் வெகுண்டு போன லிங்கு, ‘அக்ரிமென்டை மீறினால், நடப்பதே வேறு’ என்று மிரட்ட, சிவா தனக்கு வேண்டப்பட்டவர்களமூலம் சமாதானம் பேச, ரேட் 6 கோடியாக்கப்பட்டது. எனவே அடம்பிடித்ததால் தன்னுடைய ரேட்டில் 5 கோடி லாபமடைந்தார், சிவகர்த்திகேயன்.
ஒரு பாட்டுக்கு நடனமாடிய விஜய சேதுபதி:

VIJAYA SETHUPATHY
கதாநாயகன் விஷயத்தில் எப்படி விஜய் சேதுபதி இமேஜ் பார்ப்பதில்லையோ, அதுபோல் யாராவது ஒரு பாடலுக்கு நனமாடக் கூப்பிட்டாலும் மறுப்பதில்லை. அந்த வகையில் தினேஷ் கதாநாயகனாக நடித்த ‘திருடன் போலீஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதற்குமுன் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தில் முதன் முதல் ஒருபாடலுக்கு நடனமாடியவருக்கு இது இரண்டாவது படம்.

அனுஷ்கா, சமந்தாவை முந்திய நஸ்ரியா:

NASRIYA
இப்போதெல்லாம் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்று அறிந்துகொள்ள நடிகைகள் ‘ பேஸ் புக்கி’ல் கணக்கு துவங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 2007-ம் ஆண்டே கணக்கு துவங்கிய அனுஷ்காவை இதுவரை 59 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 2011-ம் ஆண்டு கணக்கு துவங்கிய சமந்தாவை இதுவரை 58 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஆனால் 2012 ம் ஆண்டு கணக்கு துவங்கிய நஸ்ரியாவை இரண்டே வருடத்துக்குள் 80 லட்சம் பேர் லைக் செய்து, பின்தொடர்ந்து வருகின்றனர். அதோடு அவரது அழகையும் தாறுமாறாகப் புகழ்ந்து தள்ளிவரும் ரசிகர்கள் திருமணத்துக்குப் பிறகும் கலைச்சேவை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த வேண்டுகோளை, பஹத் பாஸிலின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார், நஸ்ரியா.
ஒரு பாட்டுக்கு நடனமாடிய விஜய சேதுபதி:

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>