/* ]]> */
Jan 062015
 

சினிமா:

அனிருத்தை டென்ஷனாக்கிய ரசிகர்கள்:

ANIRUDH

 

‘ மான் கராத்தே மற்றும் ‘கத்தி’ படங்களில் அனிருத்தின் இசயைக் கொண்டாடிய இணயதள ரசிகர்கள் , தற்போது அவரது இசையில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரு ஹாலிவுட் பட ஆல்பத்திலிருந்து சுட்டவை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் அந்த ஆல்பத்தையும்  இணையதளத்தில் வெளியிட்டு அனிருத்தை டென்ஷன் செய்துவிட்டுள்ளனர்.  அனிருத்’ இது  என் வளர்ச்சியைக் கண்டு பொறுக்கமுடியாத சில இசையமைப்பாளர்கள் செய்யும் சதிவேலைதான் இது என்று  தன் அபிமானிகளிடத்தில் கூறி வருகிறார். அத்துடன் நில்லாமல், இதற்காக அவர்களை எப்படியேனும் பழி வாங்கியே தீருவது என்ற முடிவில் இறங்கியுள்ள அனிருத் தன் போட்டி இசையமைப்பாளர்கள் எந்தெந்த ஆல்பங்களிலிருந்து ட்யூன்களைத் திருடியிருக்கின்றனர் என்பதை ஆராயும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

விஷாலுக்கு   தடை போட்ட போலீஸார்:

vishal6

 

சமீப காலமகத் தான் எந்த அவுட்டோருக்கு சென்றாலும் அங்கு ஏதாவது புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யப்பட்டால், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில்  ஒப்படைத்து வந்தார், விஷால். அதையடுத்து அவரது ரசிகர்களும் சிலரைப் பிடித்து ஸ்பாட்டில் தாக்கத் துவங்கிவிட்டனர். இதனால், போலீஸுக்கு தலைவலியாகிவிட்டது.அதனால், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ‘எங்களிடம் புகார் கொடுங்கள். சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் தண்டிக்கிறோம். நீங்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று விஷாலிடம் கண்டிஷனாக சொல்லிவிட்டனர், காவல் துறையினர். இதனால், தன் ரசிகர்களின் கையைக் கட்டிப் போட்டுள்ளார், விஷால்.

ஹன்சிகாவுக்கும் வாள் பிடிக்க ஆசை:

நயன் காதலன் பிரபு தேவா ஓல்ட் மேன் - ஹன்சிகா மோட்வானி

ஸ்ரேயா, அனுஷ்காவைதொடர்ந்து, ஹன்சிகாவுக்கும் வாள் பிடிக்கும் ஆசை வந்துவிட்டது. விஜய் ஜோடியாக அவர் நடிக்கும் புதிய படத்தில் , வாள் சண்டையில் பொளந்து கட்டுகிறார். இதற்காக , முறைப்ப்டி ஒரு சண்டை பயிற்சியாள்ரிடம் வாள் வீச்சை கற்றுள்ளாராம். . ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் , மற்ற படங்களில் நடிப்பதற்கு  பாதிப்பு  வரும் என்பதால், , மிக கவனமாக சண்டைக் காட்சிகளில்,நடித்து வருகிறார். ஆனால், சாக்லெட் பேபியான   ஹன்சிகாவவை, வாளுடன் நடிக்க வைத்தால், எடுபடுமா? என்று அவரின் ரசிகர்களிடயே முணுமுணுப்பு எழுந்துள்ளது.

%%%%%%%%%%%%%%%%%%%%%

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>