/* ]]> */
Sep 112018
 

சாக்லேட் பணியாரம்:

தேவை:

பச்சரிசி, இட்லி அரிசி- தலா 1 டம்ளர், உளுத்தம்பருப்பு= கால் தம்ளர்; வெல்லத் தூள், சாக்லேட் சிரப்- தலா கால் தம்ளர்; ஏலத்தூள்- சிட்டிகை; வெந்தயம்-சிறிதளவு; சாக்கோ சிப்ஸ், நெய், பொடித்த சர்க்கரை’, தேவையான அளவு உப்பு.

செய்முறை:

பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச் சேர்த்து ஊற வைக்கவும். 4 மணி நேரம் கழிந்த பிறகு களைந்து தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாக் அரைக்கவும்.  இதனுடன் உப்பு சேர்த்துக் அரைத்துப் புளிக்க வைக்கவும்.

பாத்திரத்தில் வெல்லத்தூள் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி விட்டு\, இறக்கி வடிகட்டவும். புளித்த மாவுடன் ஏலத்தூள், வெலல்க் கரைசல், சாக்லேட் சிரப் சேர்த்துக் கலக்கவும். குழிப் பணியாரக் கல்லை அடுப்பில் காய வைத்து  மாவை பாதி அளவு ஊற்றி, சாக்கோ சிப்ஸ்களை சிறிது தூவி மேலே மீண்டும் மாவை ஊற்றி, நன்கு வெந்ததும் எடுக்கவும். சர்க்கரையைத் தூவிப் பறிமாறவும்.  சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>