/* ]]> */
Jun 292017
 

சரிவிகித சத்தான உணவு:

BALANCED DIET

உலகம் இயங்க நிலம், நீர், நெருப்பு காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் (பஞ்ச பூதம்) எவ்வாறு முக்கியமோ அதே போன்று நமது உடல் சிறப்பாக இயங்க 5 வித உணவுகள் அவசியம்.ஒவ்வொருவரும் இவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது.

தானியங்கள், காய்கறிகள், பழங்கள் புரதம் மிகுந்த பருப்பு உள்ளிட்டவைகள் , பால் பொருட்கள் ஆகியவைதான் இந்த 5 விதமான உணவு வகைகள்.

தானியங்களில் அரிசி, கேழ்வரகு, கம்பு, திணை, கோதுமை, சாமை, வரகு குதிரைவாலி, சோளம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளவும்.

புரதம் நம் உடலௌக்கு அத்தியாவசியத் தேவையான ஒன்று. பருப்பு வகைகளில் இது மிகுதியாக உள்ளது. துவரம்பருப்பு, பாசிப் பருப்புஉளுந்து, பச்சைப் பயறு, ராஜ்மா (ரெட் கிட்னி பீன்ஸ்) உள்ளிட்ட 16 வகை பருப்பு வகைகளில் உங்களுக்குப் பிடித்தமான ஒருவகை நம் அன்றாட உணவில் இடம் பிடிக்கவேண்டும். அசைவப் பிரியர்கள் கோழி, மீன் ஆகியவற்றை உண்ணலாம்.

ஆரஞ்சு, பச்சை, சிகப்பு நிற காய்கறிகள் உணவுத் தட்டில் இடம் பெறுவதை தினமும் உறுதி செய்துகொள்ளுங்கள். கீரை வகைகள், பாகற்காய், புடலங்காய் உள்ளிட்டவை பச்சை வகைகளிலும், தக்காளி போன்றவை சிகப்பு வகையிலும், கேரட் உள்ளிட்டவை ஆரஞ்சு வகையிலும் அடங்கும்.

பழங்களைப் பொறுத்தவரை அந்தந்த சீசனுக்குக் கிடைப்பவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தர்பூசணி, கிர்ணி தொடங்கி ஆப்பிள், திராட்சை, கொய்யா என உண்ணத் தகுந்த அத்தனை பழ வகைகளிலும் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தே உள்ளன.

மேற்கண்ட 4 வகை உணவுகளையும்  நாம் எடுத்துக்கொள்ளும் மொத்த உணவில் 4 பாகங்களாக பிரித்து சேர்த்துக்கொள்ளவேண்டும். சற்று கூட குறைய இருந்தாலும் பிரச்சினை இல்லை.

ஐந்தாவதான பால் பொருட்களை தினமும் 400 மில்லி எடுத்துக்கொல்ளவேண்டும். பால், மோர், தயிர் உள்ளிட்டவைகளை மறக்காமல் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவைதான் நம் உடலுக்கு ஆரோக்கிய உணவாக அமையும். அதிலும் கோடையில் மிகுந்த பலன் தரவல்லது.

^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>