சம்மர் ஸ்பெஷல் அழகு குறிப்புகள் – summer special azhagu kurippugal
அழகு குறிப்புகள்
- உருளைக்கிழங்கு வேகவைத்து அரைத்தது,தயிர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் குளித்தல் கூந்தல் பளபளப்பாகும்.
- எலுமிச்சம்பழத் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்துதயிர், முள்ளங்கி சாறும் கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும்.தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.
- கூந்தல் அடர்த்தியாக வளர 4 கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்துவந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
- பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் ,பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.
- இரவில் தூங்கும் முன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசி வந்தால் உதடுகளில் அழகு கூடும்.
- கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து வந்தால் மேனியில் மினுமினுப்பு அதிகரிக்கும்.
- பீன்ஸை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவினால் பப்பாளப்பு கிடைக்கும்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments







Please comment with your real name using good manners.