/* ]]> */
Jun 282017
 

சம்சா குட்டீஸ்! உங்களுக்குத் தெரியுமா?

செயற்கை மழையை எப்படி பெய்ய வைக்கிறார்கள்?:

ARTIFICIAL RAIN

மேகம் உருவாகத் தூண்டுதல், மேகம் திரளத் தூண்டுதல், மேகத்தை மழை பொழியத் தூண்டுதல்,என மூன்று வகைகளில், செயற்கை மழையைப் பெய்ய வைக்கிறார்கள். மேகம் இல்லாத சூழலில், மேகத்தை உருவாக்க கால்சியம் முளோரைடு, கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு முதலிய நீரை உறிஞ்சக்கூடிய பொருட்களைத் தூவி, காற்றில் உள்ள ஈரப் பதத்தை திரளச் செய்வார்கள்.

இரண்டாம் நிலையில், உப்பு அமோனியம் நைட்ரேட், உலர் பனி முதலியவற்றை சிறு சிறு நுண்துகள்களாகத் தூவினால், அவை நீர் திரள விதையாகச் செயல்பட்டு, மேகத்தை திரளச் செய்து , அதில் ஈரப் பதத்தைக் கூட்டும். இப்போதும் மேகத்தில் நீர் நீராவி வடிவில், வாயு நிலையில் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே மேகத்தில் உள்ள நீர் கீழே விழாது.

மூன்றாம் நிலையில் சில்வர் அயோடைடு போன்ற வேதிப் பொருட்களை, திரண்ட நீர்த் திவலைகளைக் குளிரச் செய்து, பனித் துளிகளாக மாறும். பனித் துளி அருகில் உள்ள வேறு பனித் துளிகளையும் சேகரித்து திரட்சி கொள்ளும். ஒரு கட்டத்தில், பனித் துளி அளவு பெருத்து, காற்றில் மிதக்க முடியாமல், கீழே விழும். அந்த வேகத்தில் பனித்துளி உருகி நீர்த் திவலைகளாக மாறி, மழையாகப் பெய்யும்.

வேறு எங்காவது பெய்ய வேண்டிய மழையைத்தான், செயற்கை மழை இங்கே பெய்ய வைக்கிறது. புதிதாக நீரை உருவாக்குவதில்லை. எனவே இந்த முறைப் பெருமளவு பரிந்துரைப்பதில்லை.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>