/* ]]> */
Apr 212017
 

சம்சா குட்டீஸ்!- உங்களுக்குத் தெரியுமா?

சிலருக்கு மட்டும் இடது கைப் பழக்கம் ஏன்?

LEFTIST

சுமார் பத்தில் ஒருவர் இடது கைப் பழக்கம் உள்ளவராக இருக்கிறார் என்கிறது ஒரு ஆய்வு. எழுதுவது, பொருளை எடுப்பது, வீசுவது, பிடிப்பது என எல்லாச் செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள்.

இடது மூளை வலதுபுற , வலது மூளை இடதுபுற உடலையும் இயக்கும். அதிகமாக ஆதிக்கம் செலுத்தும். வலது கைப் பழக்கம் போல , சிலருக்கு இடது கைப் பழக்கம் இயல்பாக் இருக்கிறது. இது ஒரு நோயோ குறைபாடோ அல்ல.

இடது கை[ப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்ப்டுத்தி , வலது கைப் பழக்கத்துக்கு மாற்றினால், அவர்களின் செயல்திறன் குறைந்து போகலாம். ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளின், காந்தி, சச்சின், பில்கேட்ஸ் போன்ற சாதனையாளர்கள் பலர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்.

பரம்பரையாக இடதுகைப் பழக்கம் வருவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன, ஜீன் அமைப்பில் இருக்கும் இருக்கும் வேறுபாட்டாலும் , இடது கைப் பழக்கம் வருகிறது என்ற கருத்தும் இருக்கிறது. ஆயினும் இதுவரை அதற்கான ஜீன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிறவி இரட்டையர்களில் நடத்தப்பட்ட ஆய்வும் , மரபணு தாக்கம் நான்கில் ஒரு பகுதிதான் எனக் கூறுகிறது.

எத்தனை ஆராய்ச்சிகள் நடந்தாலும், இன்றும் இது ஒரு அறிவியல் புதிர்தான்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>