/* ]]> */
Apr 052017
 

சம்சா குட்டீஸ்!- உங்களுக்குத் தெரியுமா? நொடியை 100 கோடியாக வகுக்கும் நாசா கடிகாரம்:

NASA-CLOCK,

ஒரு நொடிய 100 கோடியால் வகுத்தால் என்ன கிடைக்குமோ, அதைத் துல்லியமாகக் கண்டறிந்து அளவிடும் கடிகாரத்தை , நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆறு பச்சைநிற லேசர் ஒளிக் கற்றைகளைக் கொண்டு இயங்கும் வகையிலான இக் கடிகாரம், வரும் 2018-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாசா விஞ்ஞானி ஒருவர் கூறும்போது ‘’ ஒளி மிக வேகமாகப் பயணிக்கும் நிலையில், மிகச் சரியாக அதனை அளக்க, உயர்திறன் வாய்ந்த கடிகாரம் வேண்டும். நாங்கள் உருவாக்கியுள்ள கடிகாரம், நொடியின் 100 கோடியின் ஒரு பகுதியையும் அளக்கும். அதைப் பயன்படுத்தி, விண்வெளிக்கும் கோள்களின் மேற்பரப்புக்கும் இடையேயான தொலைவை துல்லியமாகக் கண்டறிய முடியும். இதனால், கடல் பனிப் பாறைகள், மலைகள், காடுகளின் உயரத்தை முன்பைவிட துல்லியமாகக் கணக்கிடலாம்.’ என்றார்.

^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>