/* ]]> */
Nov 252016
 

சம்சா குட்டீஸ்! உங்களுக்குத் தெரியுமா?

பல்லிகளின் வால் துண்டான சில நாட்களிலேயே மீண்டும் வளர்கிறதே எப்படி?

tail-of-lizard

ஒரு கிளையை நட்டு வைத்தால், மரம் வளர்ந்துவிடும். ஸ்டார் ஃபிஷ் எனப்படும் மீனின் கை போன்ற பாகம் துண்டானாலும், அந்த மீன் முழுமையாக மறுபடி வளர்ந்துவிடும். அதுபோல, எதிரியைத் திசை திருப்ப, தமது வாலை வெட்டிவிட்டு பல்லிகள் தப்பும். பின்னர் சில நாட்களிலேயே அதன் வால் மறுபடி வளர்ந்துவிடுகிறது.

சமீபத்தில்தான் மரபணு ஆய்வு மேற்கொண்டு, இந்தப் புதிருக்கு விடை தேடிக்கொண்டு இருக்கிறாரகள். ‘பல்லியின் வால் பகுதியில் உள்ள தசையில், 326 மரபணுக்களை முடுக்கி இயங்க வைப்பதன் தொடர்ச்சியாகவே வால் முளைக்கிறது’ என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  • காயம்பட்ட இடத்தில் காயத்தை ஆற்றும் மரபணு
  • சூல்கொண்ட கரு, முழுமையாக வளர்வதற்குத் தேவையான ஹார்மோன்களை உமிழும் மரபணு

என, பல மரபணுக்கள் இதில் அடங்கும். பல்லிகளை ஆய்வு செய்து, இந்த மரபணுக்கள் அடிப்படையில், செயற்கையாக மனித கைகால்களை மறுபடி வளரவைக்க முடியுமா என சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.

^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>