/* ]]> */
Oct 182016
 

சம்சா குட்டீஸ்! உங்களுக்குத் தெரியுமா?

  • எலிஸபெத் ராணிக்குப் புதிய பெருமை:
  • queen-elizabeth

உலகின் மூத்த முடியாட்சித் தலைவர் என்ற பெருமையை, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் பெற்றூள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபால்(88), சில நாட்களுக்கு முன் மறைந்தார். 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக மன்னராக இருந்த அவர், ‘உயிரோடிருக்கும் மிக நீண்ட கால மன்னர்’ என்ற பெருமையைப் பெற்றிருந்தார். தற்போது, அவருடைய மறைவையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத்துக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது. அவர் ராணியாகப் பதவியேற்று 64 ஆண்டுகள் 8 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு 90 வயதாகிறது!.

  • ஓட்டுனரில்லா டிராக்டர்:
  • tractor-without-driver

பிரிட்டனில், விவசாய வளர்ச்சிக்கு ஏதுவாக, ஓட்டுனரில்லாத டிராக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப, உணவுத் தேவையும் அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்ட புதிய தொழில் நுட்பங்களை, அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வரிசையில், ‘ஓட்டுனர் இல்லாத டிராக்டர்’ கண்டுபிடிப்பு, விவசாயத்துறைக்கு முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், பிரிட்டனில் உள்ள 1,60,000 ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>