/* ]]> */
Sep 202016
 

சம்சா குட்டீஸ்! உங்களுக்குத் தெரியுமா?

தாமரை இலையில் ஏன் தண்ணீர் ஒட்டுவதில்லை?

lotus-leaf

சிறிய நீர்த்துளியாஅந்து, தனது சொந்தப் பரப்பு இழுவிசையால், (Surface tension )  திரண்டு, முத்து போன்ற நீர்த்துளியாக இருக்கும். ஈரம் ஆகக்கூடிய தரைப் பரப்பின் மீது, அந்தத்துளி விழுந்தால், அதன்மீது இரண்டு விதமான ஆற்றல்கள் எதிரும் புதிருமாக செயல்படும். நீரின் பரப்பு இழுவிசை, நீர்த்துளியயிக் கட்டிப்பிடித்து வைக்க முயற்சி செய்யும். அதே சமயத்தில், பூமியின் கவர்ச்சி ஈர்ப்பு விசை (Gravitational force ) நீர்த்துளியைக் கீழ் நோக்கி அழுத்தும். இறுதியில், நீர் படிந்து, பரப்பின்மீது படரும். தாமரை இயலி மீது, நானோ அளவில், மிக மிக நுண்ணிய கூர் ஊசி போன்ற அமைப்புகள் உள்ளன. நீர்த்துளி, இலையின்மீது வந்து விழும்போது, அந்தத்துளி, முன்று நான்கு நுனிகளின் முகட்டில் படிகிறது. இந்த ஊசி அமைப்புகள், மெழுகு போன்ற ஒரு பொருளினால் ஆனவை. எனவே, நீரை விலக்கும் தன்மையை இவை பெற்றுள்ளன. இதன் காரணமாக , ஊசி அமைப்பின் மீது நீர் ஒட்டுவதில்லை. துளியின் பரப்பு இழுவிசை சிதையாத நிலையில், நீரானது துளியாகவே இருக்கிறது. அந்தத் துளி, இலையின் மீதுஒட்டாமல், துளி வடிவிலேயே உருண்டு ஓடுவதுடன், தூசு தும்புகளையும் தன்னுடன் சேர்த்து அடித்துச் செல்லும். எனவே, தாமரை இலை சுத்தமாகவும் இருக்கிறது. இந்த நனோ தொழில் நுட்ப அறிவை வைத்து , தானே சுத்தம் செய்துகொள்ளும் ஷர்ட் முதல், அழுக்கு படியாத பல பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>