சம்சா குட்டீஸ்!- உங்களுக்குத் தெரியுமா?
தாமரை இலையில் ஏன் தண்ணீர் ஒட்டுவதில்லை?:
சிறிய நீர்த்துளியானது, தனது சொந்த பரப்பு இழுவிசையால்( Surface tension) திரண்டு, முத்து போன்ற நீர்த்துளியாக இருக்கும். ஈரம் ஆகக்கூடிய தரைப் பரப்பின்மீது, அந்தத்துளி விழுந்தால், அத்ன்மீது இரண்டு விதமான ஆற்றல்கள் எதிரும் புதிருமாக செயல்படும். நீரின் பரப்பு இழுவிசை, நீர்த்துளியைக் கட்டிப் [ப்இடித்து வைக்க முயற்சி செய்யும். அதே சமயத்தில் பூமியின் கவர்ச்சி ஈர்ப்பு விசை ( Gravitational forces) நீர்த்துளியைக் கீழ் நோக்கி அழுத்தும்.இறுதியில் நீர் படிந்து, பரப்பின்மீது படரும். தாமரை இலை மீது நானோ இலை அளவில், மிக மிக நுண்ணிய கூர் போன்ற அமைப்புகள் உள்ளன. நீர்த்துளி, இலையின்மீது வந்து விழும்போது, அந்தத்துளி மூன்று நான்கு நுணியகளின் முகட்டில் படிகிறது. இந்த ஊசி அமைப்புகள், மெழுகு போன்ற ஒரு பொருளினால் ஆனவ. எனவே நீரை விலக்கும் தன்மையை இவை பெற்றுள்ளன. இதன் காரணமாக, ஊசி அமைப்பின்மீது நீர் ஒட்டுவதில்லை. துளியின் பரப்பு இழுவிசைசிதையாத நிலையில், நீரானது துளியாகவே இருக்கிறது. அன்டஹ்த் துளி இலையின்மீது ஒட்டாமல்,துளி வடிவிலேயே உருண்டு ஓடுவதுடன், தூசு தும்புகளையும் தன்னுடன் சேர்த்து அடித்துச் செல்லும். எனவே தாமரை இலை சுத்தமாகவும் இருக்கிறது என்ற தகவல், எலெக்ட்ரான் நுண்ணோக்கி கொண்டு செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. இந்த நானோ தொழில் நுட்ப அறிவை வைத்து, தானே சுத்தம் செய்துகொள்ளும் ஷர்ட் முதல் அழுக்கு படியாத பல பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments