/* ]]> */
Sep 072016
 

சம்சா குட்டீஸ்!- உங்களுக்குத் தெரியுமா?

விமானங்களில் வைஃபை:

VI-FI FACILITY IN THE FLIGHTS

புது டெல்லி, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை இணைய தள வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து துறையின் செயலர் இந்திய வான் எல்லைக்குள் பறக்கும் விமானங்களில் விரைவில் வைஃபை வசதி அனுமதிக்கப்பட உள்ளதைத் தெரிவித்தாஎர். இந்த அனுமதி அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கும் பொருந்தும்.

ஆந்திராவில் ஹெலிகாப்டர் சுற்றுலா:

TOUR TRAVEL IN ANDHRA BY HELICOPTER

ஆந்திர அரசு அடுத்த மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, செப்டெம்பெர் 25 அன்று, விசாகப்பட்னம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கும், ஸ்கை சாப்பர் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, விசாகப்பட்டிணத்தில், குறிப்பிட்ட 3 இடங்களில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்கப்படும்.

34 கிலோ எடையில் முத்து:

PEARL

உலகின் மிகப் பெரிய முத்து , பிலிப்பைன்ஸ் நாட்டு மீனவர், ஒருவரின் வலையில் 10 வருடங்களுக்கு முன்பு சிக்கியது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முத்தின் எடை 34 கிலோ; நீளம் 2.2 அடி; அகலம் 1 அடி. அந்த மீனவர், தனது படகில் தட்டுப்பட்ட இந்த முத்தினை ஒரு அதிர்ஷ்டக் கல்லாக நினைத்து, இவ்வளவு காலமாக தனது வீட்டில் வைத்திருந்தார். வேறொரு பகுதிக்குக் குடி பெயர வேண்டி இருந்ததால், சுற்றுலாத் துறையில் பணியாற்றி வரும் தனது உறவினர் ஒருவரிடம், விலை மதிப்பற்ற இந்த முத்தை வழங்கியுள்ளார். அந்தப் பெண்மணி நகர மேயரிடம் ஒப்படைத்ததால், இந்தத் தகவல் தற்போது வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது.

^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>