/* ]]> */
Sep 232011
 

பார்டிக்களின் முடிவில் டெஸ்ஸர்ட் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. டெஸ்ஸ்ர்டில் ஒரு ஸ்வீட்டும் ஐஸ்க்ரீமும் கொஞ்சம் பழங்களும் தருவார்கள். ஐஸ்க்ரீமும் அல்வாவும் அப்படி ஒரு நல்ல காம்பினேஷன். இங்கே அதிலேயே புதுமையான ஃப்ரூட் ஐஸ்க்ரீமும் மிக்ஸ் அல்வாவும் பார்ப்போம்.

1. பழக் கலவை  ஐஸ்கிரீம்:

ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்:

பால்-1/2 லிட்டர்; மாம்பழம், தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள்; மாதுளை முத்துக்கள்; சர்க்கரை தேவையான அளவு.

செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி ஆறியதும், பிரிட்ஜில் வைக்கவும். ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு எடுத்து பழங்கள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
பின்பு அதை டம்ளரிலோ கண்ணாடி கிண்ணங்களிலோ ஊற்றி மீண்டும் பிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிட்டால், புதுமையாகவும் சுவையாகவும் இருக்கும்.

2. மிக்ஸ் அல்வா:

தேவையான பொருட்கள்:

பொட்டுக் கடலை( உடைத்த கடலை)- 2  கோப்பை; சர்க்கரை-2 கோப்பை; முந்திரி பருப்பு-10; திராட்சை-5; கேசரிப் பௌடர்-2 சிட்டிகை, ஆரஞ்சு எஸென்ஸ்-சில துளிகள்;  பச்சைக் கற்பூரம்-சிறிது; நெய்-1/2 கோப்பை.

செய்முறை:

பொட்டுக் கடலையை ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து எடுத்து,  அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஐந்து முந்திரிப் பருப்பை சேர்த்து நன்கு மிருதுவாக அரைக்க வேண்டும்.

சர்க்கரையை ஒரு கோப்பை தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். பாகு கம்பிப் பதம் வந்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதை போட வேண்டும். நெய் சேர்த்த பின் ஒரு ஸ்பூன் பாலில் கேசரிப் பௌடரை கலந்து சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.  அல்வா பதம் வந்ததும், ஆரஞ்சு எஸென்ஸ், பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து வறுத்த முந்திரி பருப்பு , திராட்சையை தூவி ஆறியதும் துண்டுகள் போட்டு சாப்பிடலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>