/* ]]> */
Sep 062018
 

சமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன?

COOKING OILS

எல்லா விதமான இயற்கைஉப் பொருள்களும் மனிதர்களுக்கு நன்மை தருவது அல்ல. அதேபோல் எல்லாவிதமான செயற்கைப் பொருள்களும் கெடுதி அல்ல. அதாவது இயற்கை என்றாலே நன்மை தரும் என எளிதாகக் கருதிவிடக்கூடாது. அம்மை நோய், போலியோ நோய்  போன்ற நோய்களைத் தரும் கிருமி இயற்கையானதுதான். கண்ணொளி தந்து பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும் மூக்குக் கண்ணாடி செயற்கையானதுதான். ஆக, இயற்கை அல்லது செயற்கை எதுவாக இருப்பினும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தீமையே.

சமையல் எண்ணெய்களில் நமது உடலியக்கச் செயல்பாட்டுக்குத் தேவையான கொழுப்பு இருக்கிறது. அவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது உடல் பருத்து இருதய நோய் உட்பட பல்வேறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு இதன் காரணமாகவே இயற்கைப் பொருளாக இருந்தாலும் அவை உடலுக்குக் கேடு தரும் எனச் சொல்லப்படுகிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>