/* ]]> */
Dec 252019
 

சனிப் பெயர்ச்சி  2020-2023:

SATURN
ரிஷபம்:

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…

சனி பகவான், வருகிற ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். திருக் கணிதப் பஞ்சாங்கப்படி24.1.20  முதல் சஞ்சரிக்கிறார்.   இந்த சஞ்சாரம் 2 1/2 வருஷம் நீடிக்கும். இதுவரை அஷ்டம சனியின் பிடியில் சிக்கித் தவித்த நீங்கள் இந்த 9-மிட சஞ்சாரத்திலும் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த சஞ்சாரத்திலும் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
பணம் வீணாகச் செலவழியும். புண்ணியம் தரும் காரியங்கள் நடக்காமல் தடைப்படும். தகப்பனுக்கு அல்லது அவருக்குச் சமமான ஒருவருக்கு அந்திமக் கடன் செயய வேண்டிய கட்டாயம் நேரும். நிதமும் ஏதாவது ஒரு சோகம் அல்லது துக்கம் மனதை அரித்துக்கொண்டே இருக்கும். எட்டாம் இடத்தில் சொன்ன துர்ப்பலன்கள் இங்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய்கள், ஆபத்து, விபத்துகள் உண்டாகும். பணம் வரும் வழிகள் தடைப்படும். பூர்வ புண்ணியம் குறையும்.
நல்ல வாய்ப்புகள் எல்லம் கை நழுவும். அதிர்ஷ்டக் கட்டையான காலமாக இது இருக்கும். சௌபாக்கியம், புண்ணியம் ஆகியன குறையும். கெட்ட பாவச் செயல்களிலேயே மனம் ஈடுபடும். சிறைப் பயம், குடும்பப் பிரிவு, பலவகை நோய்கள் முதலியன நேரும். தெய்வ நம்பிக்கையும் ஒழுக்கமும் குறையும். நித்திய அனுஷ்டானங்களை மறப்பர். இப்படியாக அசுப பலன்களாக நிகழும்.
பெண்களுக்கு:
அஷ்டமச் சனியிலிருந்து விடுபட்டு, இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்களிலிருந்தும், பாதிப்புகளிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள். . இத்தகைய பாதிப்புகள், சனியின் இந்த 9-மிட சஞ்சாரத்தில் தொடராது. உங்கள் மதிநுட்பத்தால் வரவிருந்த பெரிய பாதிப்பை நீங்கள் பந்தாடிவிட்டீர்கள். உங்களால் நன்மையடைந்தவர்கள் உங்களுக்கே துரோகங்களையும் கெட்ட பெயரக்ளையும் அஷ்டம சனியின்போது ஏறப்டுத்தினார்கள். அத்தகைய தொல்லைகள் இனி உங்களைத் தொடராது. இனி வரும் காலமெல்லாம் உனக்ளது கை எல்லாத் துறைகளிலும் ஓங்கி நிற்பது உறுதியே. குழந்தைகள் விஷயத்திலும், அவரகளின் கல்வி அல்லது திருமண விஷயத்திலும் நீங்கள் ஆரம்பித்த நல்ல காரியம் மற்றவர்கள் கேலிக்கும் பரிகாசத்திற்கும் ஆளாகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த நிலை இப்போது மாறி, பிறரின் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நீங்கள் தற்போது தள்ளப்படுவீர்கள். புகுந்த வீட்டிலும் கணவரிடத்திலும் உங்களின் முயற்சிக்கும் செயலுக்கும் இந்த சனி மாற்றத்திற்குப் பிறகு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, உங்கள் உழைப்பிற்க்குக் கிடைக்கும் ஊதியம். இதுவரை பட்ட அல்லல்களுக்கான ஒரு ஆறுதல் என்றே சொல்லலாம்.
மாணவர்களுக்கு:
வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும் மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். சனியின் ஆரம்ப காலம் உங்களை வெகுவாக பாதிக்காது. குரு சஞ்சாரம் 2020 நவம்பர்  மாதம் முதல்  அனுகூலமாய் உள்ளதால், பெரிய அளவில் பாதிக்காது. அதன்பிறகு ஓராண்டுக் காலம் உங்கள் கல்வியில் நீங்கள் முழுக் கவனம் செலுத்தியும் போராடவேண்டியிருக்கும். மேலும் கேதுவின் சஞ்சாரம் அனுகூலமற்றுக் காணப்படுவதால், உங்கள் எண்ணங்களும் கல்வித் துறையில் நீங்கள் இதுநாள்வரை கட்டிய மனக் கோட்டைகளும் தவிடுபொடியாகும். நீங்களாகவே கல்வியைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகும். மேலும் பெற்றோர்களும் உறவினர்களும் ஆசிரியர்களும் உங்கள் போக்கிலும் நடவடிக்கையிலும் குற்றம் குறை கண்டுபிடித்துப் பேசும் அளவுக்கு உங்கள் நிலை மோசமாகலாம். இந்த நிலையை மாற்ற குருவானவர், உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். இருப்பினும் சனி மற்றும் ராகு கேதுவின் தீய சஞ்சாரத்தைக் கட்டுப்படுத்த இறைவழிபாடு அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு:
தற்போது உங்கள் ராசிக்கு 9-மிடத்திற்கு பெயர்ச்சியாகியுள்ள சனிபகவான், ஆரம்பத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தமாட்டார்.காரணம் உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு  2020 நவம்பர்  மாதம்  முதல் குருவின் 9-மிட சஞ்சாரம் சாதகமாயிருப்பதாகும். இருப்பினும் கேது மற்றும்  ராகு போன்ற கிரகங்களின் தீய சஞ்சாரமானது உங்கள் அரசியல் பாதையில் சில குறுக்கீடுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாய் நீங்கள் சனியின் பாதிப்பிலிருந்து இப்போது தப்பித்தாலும், சில பிரச்சினைகளை ராகு-கேதுவின் சஞ்சாரத்தால் எதிர்கொள்ள நேரும்.   2020 நவம்பர் மாதம் வரையுள்ள குருவின் 8-மிட சஞ்சாரம் உங்களுக்கு சில பாதிப்பை அரசியல் அல்லது பொருளாதார அடிப்படையில் ஏற்படுத்தலாம். உங்களுக்கு மேல் பதவியில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் உங்களுக்கு பதவி ஆசை அல்லது முன்னேற்றப் பாதையைக் காட்டி, அது கைகூடும் நேரத்தில் அவரக்ளே அதைத் தட்டிப் பறிக்கும் துர்ப்பாக்கிய நிலையும் ஏர்படலாம். உங்களின் நியாயமான நெடுநாள் ஆசைக்கு உங்கள் மூத்த தலைவர்கள் உங்களையே ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. சனியின் 9-மிட சஞ்சாரம் அரசியலில் உங்களுக்கு நன்மை செய்யாது என்பதோடு தீமைகளையும் தடுக்காது. எனவே இறை நம்பிக்கையே கைகொடுக்கும்.

சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம்  கீழே தரப்பட்டுள்ளது.

1.மே மாதம்  11, 2020  முதல்  செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,

2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்

3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம்  23, 2022வரை141 நாட்களும்

சனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.

சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். இச்சமயத்தில், உங்கள் முயற்சிகளுக்கு எதிர் விளைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும்.

பரிகாரம்:
சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள்.
மேற்கூறப்பட்ட பரிகாரங்களோடு, அனுதினமும் ஆஞ்சநேயரை வழிபடுவதும், லக்ஷ்மி ஹயக்ரீவரை புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் ஏலக்காய் மாலை அணிவித்து வழிபடுவதும் வினாயகரையும் துர்க்கையையும் வழிபடுவதும் நன்மை பயக்கும். உள்ளூரில் உள்ள கோவிலில் நவகிரஹ வழிபாடு செய்யவும். சனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றவும். சக்கரத்தாழ்வாருக்கு விஷேஷ பூஜை செய்யவும். நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்லது பச்சை நன்மை செய்யும். கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் ஆழ்ந்த சிவப்பு போன்ற நிறங்களை தவிர்க்கவும். வடக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு நன்மை செய்யும். தெற்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு போன்ற திசைகளை தவிர்ப்பது நல்லது.

குருவின் சஞ்சாரம் நவம்பர் 2020 வரை அனுகூலமற்றுக் காணப்படுவதால், வியாழக்கிழமைகளில் குரு பகவானை மஞ்சள் நிற மாலை கொண்டு பூஜித்து வழிபாடு செய்யவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்வதும் நன்மை பயக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>