/* ]]> */
Dec 252019
 

சனிப் பெயர்ச்சி-2020-2023:

SATURN

மேஷம்:

மேஷம் ராசி
மேஷம் ராசி    

மேஷ ராசி :

                     திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…

இந்தஆண்டு  ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  அதுவே திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.20 முதல் செய்யும்  சஞ்சாரம் 2 1/2 வருடங்களுக்கு நீடிக்கும். இந்த சமயத்தில், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
உங்கள் பதவி, உத்தியோகத்திற்கு பங்கம் வரும். வேண்டாத இட மாற்றம் ஏற்படும். செய்வினை, பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளின் அச்சம் ஏறப்டும். மனப் பயம் கூடும். கவலை மிகும். கருமித்தனம் மேலிடும். காசி, ராமேஸ்வரம் என்று தல யாத்திரை செல்வீர்கள். அதாவது அதிக காலம் வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வர். அதிக உழைப்பும் ,குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில் ஈடுபட்டு கஷ்ட ஜீவனம் பண்ணுவர். பலனற்ற வேலைகளில் ஈடுபடுவர். வீண் அலைச்சல் மிகும். தன நஷ்டமும் கலவிக்குப் பங்கமும் ஏற்படும். தோல்வி பயம் ஏற்படும். பலவித நோய்கள் பற்றிக் கொள்ளும். அவச்சொல், பெரும் பழி, எல்லாம் அடிக்கடி வரும்.
இவருக்கு இதய ரோகம் ஏற்படும். மான பங்கம், கௌரவ பங்கம் ஏற்படும். ஓயாத உழைப்பும், அதைச் செய்ய முடியாத களைப்பும் ஏற்படும். வேலைக்குக் குறைந்த பலன்தான் ஏற்படும். புத்தித் தெளிவு சிறிதும் இராது. நிர்ணயத் திறன் குறையும். லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளைச் செய்வர். இபப்டி பல வகையிலும் கஷ்டமே ஏற்படும். சனி, எல்லா விதத்திலும், 10-ம் இடத்தில் அசுப பலனையே தருகிறார்.
பெண்களுக்கு:
மேற்கூறிய பாதிப்புகளுக்கு நீங்கள் தாராளமாக ஆட்பட ஏதுவான காலம் இது என்பதால், திருமணமான பெண்கள் மிகவும் சிரத்தையோடு செயல்படுவது நல்லது. கணவரிடமோ அல்லது அவரது உறவினரிடமோ அதிக வாக்குவாதத்தை அல்லது பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் வசிக்கும்போது உங்கள் மாமியார், மாமனார் அல்லது நாத்தனார் போன்றோருடன் காரசாரமான சண்டைக்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது காட்டாமல் விட்டுக்கொடுத்துப்போகும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அதனால் பின்னால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலம். கெட்ட பெயரும் தலைகாட்டாது. இருப்பினும் ஆறாமிடத்தில் வீற்றிருக்கும் குருவின் 9-ம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு அப்படியே ஏற்பட்டாலும். வந்த சுவடு தெரியாமல் தானாகவே அடங்கிவிடும். மேலும் தொழில் ஸ்தானமான 10-ல் வீற்றிருக்கும் சனி பகவனை இந்த ஏழாமிட குருவானவர் தனது 5-ம் பார்வையால் பார்ப்பதால், இந்த சனி பகவானின் வீர்யம் குறைந்து அவரால் ஏற்படவிருக்கும் சில மன சஞ்சலங்கள் மற்றும் உடல் மற்றும் மன சஞ்சலங்கள் ஓரளவு கட்டுக்குள் வரும். அதேபோல் குருவானவர் உங்கள் ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலத்தில் ( குருவின் கன்னி ராசி சஞ்சாரத்தில்) இந்த இந்த 10-மிட சனியின் பாதிப்புகள் ஓரளவு குறையும். அதாவது இந்த ஆண்டு செப்டமர்  மாதம் மவரை  சுமார் ஓராண்டு காலம் குருவின் சஞ்சாரமானது உங்களுக்கு சனியின் பாதிப்பை தகர்க்கும். உங்களில் சிலருக்கு திடீர் கல்யாணம் அல்லது கலாட்டா கல்யாணம் என்ற அமைப்பில் அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்து திருமணம் இனிதே நடந்தேறும். இத்தகைய திருமணத்திற்கு, உங்களின் மூத்த சகோதரர அல்லது சகோதரிகளின் பொருளாதார உதவிகளும் சரீர உதவிகளும் கிடைக்க ஏழில் வரும் குருவின் 9-ம் பார்வை மூன்றாமிடமன சகோதர ஸ்தானத்திற்க்கு ஏற்படுவதேயாகும். இருப்பினும் ராகு கேதுவின் சஞ்சாரங்கள் தங்கள் ராசிக்கு சாதகமாக இல்லாத காரணத்தால், சனி பகவானின் கடைசி நேர பயணத்தில் சில சங்கடங்களும் அல்லது பிரச்சினைகள் சற்று கடினமாக உங்களைத் தாக்கலாம். தெய்வ நம்பிக்கையே காப்பாற்ற முடியும்.
மாணவர்களுக்கு:
வீட்டு சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு, கல்வியில் போதிய ஆர்வத்தை குறைத்துக்கொள்ள இந்த நேரமானது அமைகிறது. சனியின் தாக்குதலில் ஆரம்ப காலம் உங்களைப் பெரிய அளவில் பாதிக்காது. குருவின் தற்போதைய ஆறாமிட சஞ்சாரமும் அதைத் தொடர்ந்து வரும் ஏழாமிட சஞ்சாரமும் செப்டம்பர் மாதம் வரை அனுகூலமாய் உள்ளதால், பெரிய அளவில் உங்கள் நிலையானது உங்களைப் பாதிக்காது. அதன்பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடியும் வரை உள்ள ஓராண்டு இரண்டு மாத காலத்தில் மேற்கூறிய பாதிப்புகள் கடுமையாகவே காணப்படுகிறது.பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் ஆசிரியர்களும், உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளும் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் உங்கள் மன பாதிப்பால் எடுப்பார் கைப்பிள்ளையாக யார் என்னசொன்னாலும் அதை நம்பும் விதமாக அப்படியே செயல்படுவீர்கள். உங்கள் சொந்த புத்தியைக்கூட சில சமயம் அடகு வத்துவிடுவீர்கள். எனவே யோசித்து சற்று நிதானித்து செயல்பட்டு, படிப்பில் கருத்தூன்றி படித்தால் படிப்பில் பாதிக்குமேல் வெற்றி கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு:
பத்தாமிட சனியின் ஆரம்ப காலம் உங்களைப் பெரிய அளவில் பாதிக்காதவண்ணம் வரும் ஆண்டு நவம்பர் மாதம் வரை  குருவின் சஞ்சாரம் உங்களுக்கு துணை நிற்கிறது. இதன் காரணமாக உங்களின் சொல்வாக்கு மற்றும் செல்வாக்கு போன்றவை ஓராண்டு காலத்துக்கு ந்ல்லவிதமாக செயல்படும். அதன்பிறகு சுமார் ஓராண்டு காலம் இரண்டு மாதம் சனியின் 10-மிட சஞ்சாரம் முடியும்வரை உங்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உங்களின் கீழ் உள்ளவர்களின் செயல்கள் தலை விரித்தாடும். மேலும் உங்களிடம் நெருங்கிப் பழகும் உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தாங்கியே தீர வேண்டும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை இழக்க நேரலாம். இதற்கு உங்கள் ராசிக்கு ராகு கேது தீய சஞ்சாரமும் ஒருவகையில் காரணமாய் அமையும். வீட்டு விஷயங்களில்கூட சிலருக்கு சில துரோகச் செயல்கள் தலை விரித்தாடும். அதை சர்க்கட்ட முயற்சிகள் மேற்கொள்வதைக் காட்டிலும் அவற்றைக் கண்டும் காணாமல் விடுவதே உங்களுக்கு நல்லது. மேலும் சனியின் பத்தாமிட சஞ்சாரம் முடியும்வரை நீங்கள் அடிக்கடி பணப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரும். எந்த பரிகாரமும் கை கொடுக்காது. ஆனால், தற்போதைய குரு  7-ல் சஞ்சரித்து, குரு தன் 5-ம் பார்வையால், லாப ஸ்தானமான 11-மிடத்தைப் பார்ப்பதும் உங்களின் பொருளாதாரப் பிரச்சினையை ஓரளவு சரிக்கட்டும். சகக்ரத்தாழ்வாருக்கு பரிகாரம் மேற்கொண்டால், நன்மையைப் பெறலாம்.

சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம்  கீழே தரப்பட்டுள்ளது.

1.மே மாதம்  11, 2020  முதல்  செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,

2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்

3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம்  23, 2022வரை141 நாட்களும்

சனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.

சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள்  மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த சமயத்தில் உங்கள் முயற்சிகளுக்கு எதிர் விளைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கு உடல் நலம் குன்றும். பண நஷ்டமும் பெருத்த செலவுகளும் உண்டாகும்.

பரிகாரம்:
பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள்.
மேற்கூறப்பட்டுள்ள பரிகாரங்களோடு, உள்ளூரில் உள்ள நவக் கிரகத்தை வழிபடலாம்.  சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வணங்க்வும்.

குருவின் சஞ்சாரம் ந்வம்பர் 2020 க்கு மேல்   அனுகூலமற்றுக் காணப்படுவதாக், வியாழக்   கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.

நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்ல்து பச்சை நன்மை தரும். வடக்கு, மேர்கு அல்லது வடகிழக்கு உகந்த திசைகளாகும்.

^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>