/* ]]> */
Dec 252019
 

சனிப் பெயர்ச்சி- 2020-2023:

SATURN

முன்னுரை:

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…

இந்த சனிப் பெயர்ச்சியில் பலனடையப் போகும் ராசிகள் சிம்மம், விருச்சிக  ராசி முதலியவைகளாகும் தன்னுடைய 6-மிட சஞ்சாரத்தின் மூலம் சிம்ம ராசிக்கும் 3-மிட சஞ்சாரத்தின் மூலம்  விருச்சிக ராசிக்கும் மற்றும் 11-மிட சஞ்சாரத்தின் மூலம் மீன  ராசிக்கும் நற்பலன் வழங்க உள்ளார். அதே சமயம், ,ரிஷபம் , மிதுனம், கன்னி.  துலாம்,  மகரம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
,ப்துனத்தில் சனிபகவான் 8-மிடத்தில் சஞ்சரித்து அஷ்டம சனி என்றாகியும், ரிஷபத்தில் 7-மிட சஞ்சாரம் செய்து கண்ட சனியாகியும், துலாமில் 4-மிடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனியென்றும், மற்றும்  மகரத்தில் ஏழரைச் சனியில் விரய சனியாகியும், தனுசு ராசியில் ஏழரைச் சனியாகி 2- மிடத்தில் சஞ்சரித்து  பாத  சனியாகியும் கெடு பலன்களை வழங்க உள்ளார்.
இந்த இரண்டரை வருடத்தில் இடையிடையே, குரு, ராகு மற்றும் கேது முதலிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ உள்ளதால், அவற்றின் பாதிப்பும் இருக்கும். அந்தந்த கிரகங்களின் நற்பலன், தீய பலன்களுக்கேற்ப சனிப் பெயர்ச்சியின் பாதிப்புகளும் கூடும் அல்லது குறையும்.

இந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம்  கீழே தரப்பட்டுள்ளது.

1.மே மாதம்  11, 2020  முதல்  செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,

2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்

3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம்  23, 2022வரை141 நாட்களும்

சனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.

சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். மேலும் சனி பகவான் சூரியனுக்கு அருகில் 3.11.14 முதல் 4.12 14 வரையும் 14.11.15 முதல் 16.12.15 வரையும் மற்றும் 24.11,16 முதல் 27.12.16 வரையும் நீச்ச கதியில் சஞ்சரிக்கிறார். அப்போது அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் மாறுபடும்.

சனிப் பெயர்ச்சியின்போது, சனி பகவான் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன் தருவார் . எனவே அதிகம் அஞ்சத் தேவையில்லை. அவரவர் தசா புக்திக்கேற்பவே பலன்கள் அமையும். சுய ஜாதகத்தையும் பரிசீலித்துக்கொள்ளவும்.
சனி பகவானின் திருத் தலமான திருநள்ளாறு சென்று ஆண்டிற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது. அனுதினமும் ஆஞ்சநேயர் வழிபாடும் தவறவேண்டாம்.

 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>