/* ]]> */
Dec 252019
 

சனிப் பெயர்ச்சி 2020-2023:

SATURN

மிதுனம்:

மிதுன ராசி
மிதுன ராசி

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…

இந்த வருடம் ஜனவரி மாதம் 24-ம் தேதியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிரவேசிக்கிறார்.  இதனை ‘அஷ்டமச் சனி’ என்று கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும். எனவே, இந்த சனிப் பெயர்ச்சிக்குப் பின் வரும் 2 1/2 வருடங்களுக்கு நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மாறாக தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும்.
உடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும். பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும்.
அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அபராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும். வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்கு நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு:
குடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு:
உங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.
மாணவர்களுக்கு:
வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிக்கவேண்டியது அவசியம்.

சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம்  கீழே தரப்பட்டுள்ளது.

1.மே மாதம்  11, 2020  முதல்  செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,

2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்

3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம்  23, 2022வரை141 நாட்களும்

சனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.

சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது வீட்டில் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் உண்டாகும்.கட்டுக்கடங்காத செலவினங்கள் ஏற்படுவதுடன், ஷேர் மார்க்கெட்டிலும் நஷ்டம் உண்டாகும்.

பரிகாரம்:
பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள்.

குருவின் சஞ்சாரம் நவம்பர் 2020 க்கு மேலும் அனுகூலமற்றுக்  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.

அதுதவிர , நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்லது பச்சை நன்மையைச் செய்யும். கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் ஆழ்ந்த சிவப்பு போன்ற நிறங்களைத் தவிர்ப்பது நல்லது.  வடக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு நன்மையைச் சேர்க்கும். தெற்கு, தென்மேற்கு அல்லது கிழக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது.

^^^^^^^^^^^^^^^^
[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>