/* ]]> */
Dec 252019
 

சனிப் பெயர்ச்சி 2020-2023 :

SATURN

கன்னி:

கன்னி ராசி
கன்னி ராசி

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி   நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி  சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 5-ல் சனி வரும்போது, சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படுகின்றது. புத்தி சரியாகச் செயல்படாமல், தகுந்த முடிவு எதுவும் எடுக்க முடியாமல், சில முக்கிய திட்டங்கள் நிறைவேறாமல் பாழாகும்.
ஏதாவது விபத்து முதலியவற்றால், அங்கஹீனம் ஏற்படும். பணம் கரையும். வறுமை மேலிடும். ஏதாவது இழிசெயல் செய்தாவது பிழைக்க நேரிடும். மனக் கலக்கமும் ஏற்படும்.
நடத்தை கெட்ட பெண்களின் உறவால், பொருளும் பணமும் கெடும். பலருடன் பலவகைச் சண்டைகளில் ஈடுபட நேரிடும். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படலாம். எந்த ஸ்திரமான உருப்படியான காரியமும் நிறைவேறாது.
குழந்தைகள் யாருக்காவது மாரகம் ஏற்படலாம். பந்து ஜனங்களைப் பகைத்துக்கொள்வர். குழந்தை குட்டிகளை விட்டுப் பிரிவார். சோகம் , புத்திரஹானி போன்றவை ஏற்படலாம். எனவே எல்லா வகையிலும் சனி அசுப பலனையே தருகிறார்.
அரசியல்வாதிகளுக்கு:
இதுநாள் வரையில் இருந்துவந்த அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு உங்களுக்கு அடியோடு விலகுகிறது. இதுவரை உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய அளவில் உங்களால் சாதிக்க முடியவில்லை. மேலும் உங்களின் வெளிவட்டார உறவுகளும், இதுநாள்வரை திருப்திகரமாகவும் மதிப்புடனும் இல்லை. உறவினர்கள் மத்தியில் கூட நீங்கள் பிறருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நல்ல பெயரோ அல்லது பாராட்டோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இதுவரை கஷ்டப்பட்டீர்கள். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறுகிறது. முன்பு உங்களை உதாசீனம் செய்தவர்கள் இப்போது உங்களை சுற்றிச் சுற்றி வந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் திறமையையும் ஆற்றலையும் பலவாறு புகழ்வார்கள். அதன்பிறகு ஓராண்டு காலம் சிற்சில அவலநிலைக்கு நீங்கள் ஆளாக நேரிடும். மேலும் சனியின் 10-மிட பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால், இந்த சனியின் 5-மிட மாற்றம் உங்களின் முன்னேற்றம் அல்லது சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி உங்களின் பொருளாதார மற்றும் தன நிலையில் பெரிய அளவில் மாற்றங்களையோ அல்லது ஏற்றங்களையோ ஏற்படுத்தாது. இருப்பினும் அடுத்த ஆண்டு  உங்களின் தன நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி.
மாணவர்களுக்கு:
உங்கள் ராசிக்கு இந்த 5-மிட சனியின் பெயர்ச்சியால், உங்களது கல்வி நிலையில் ஓரளவு மாற்றம் அல்லது ஏற்றம் ஏற்படும். இதுவரை அர்த்தாஷ்டம சனியின் சஞ்சாரம் உங்கள் கல்வியின் அதிர்ஷ்ட வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தி வந்தது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் , மற்றும் உறவினர்களின் அவச் சொல்லுக்கும் அறிவுரைக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆனால் அந்நிலை தற்போது அடியோடு மாறுகிறது. கல்வியில் ஓரளவு ஆர்வமும் செயல்திறனும் உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிக்குமேல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதற்கு 1-மிடத்தில் இருக்கும் குருபார்வை 5 -மிடத்தில் உள்ல சனியின் மீது விழுவதால், 3-மிடத்தில் இருக்கும் ராகுவின் சாதகமான சஞ்சாரமும் பெரிதும் துணை புரியும்,. அடுத்த ஆண்டு அதாவது 2020 -ம் ஆண்டு முற்பாதியில் நடக்கும் குருவின் 5-மிட சஞ்சாரத்தின்போது  இந்த 5-மிட சனியின் பாதிப்புகள் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் செயல்திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். நீங்கள் தவறாமல் தொடர்ந்து பாடுபட்டால், உங்களின் இலக்கில் வெற்றி பெறுவது உறுதி.
பெண்களுக்கு:
உங்களின் நியாயமான ஆசைகளும் கோரிக்கைகளும் இந்த 5-மிட சனியின் தடைகளை சந்தித்தபிறகே ஓரளவுக்கு வெற்றி பெறும். உங்களின் பேச்சுக்கும் சொல்லுக்கும் நாள்பட்டே மதிப்பு மரியாதை கிடைக்கும். வீடு நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கையும் மிகவும் தாமதமாக அடுத்த ஆண்டு பாதிக்கு மேல் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு வேண்டிய இடமாற்றம் மற்றும் சம்பள் உயர்வு போன்றவை சற்று தாமதப்பட்டு கிடைக்கப்பெறும். லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு சனியின் 7ம் பார்வை ஏற்படுவதும் களத்திர ஸ்தானத்துக்கு சனியின் மூன்றாம் பார்வை ஏற்படுவதும் நல்லதல்ல. உங்களது கணவருக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியோந்நியம் குறைந்து குடும்பத்தில் அமைதியைப் பறிக்கும். புகுந்த வீட்டினரின் பாராட்டைப் பெறுவது சற்று கடினம். அதேபோல அவர்கள் மூலமாக உங்களுக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் தாமதப்பட அலல்து மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை, பண வரவு போன்றவை நிகழ இந்த 5-மிட சனி தடையை ஏறப்டுத்தும். மேலும் 5-மிடமான புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருப்பது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வக் குறைவு அல்லது அவர்களின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு விலகும். மேலும் சனிபகவானின் 10-ம் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ம் இடத்தில் விழுவதால், உங்களுக்கும் கணவருக்குமிடையே சன்டை சச்சரவு ஏற்படும். மொத்தத்தில் இந்த 5-மிட சனி பாதிப்புகளையே அதிகம் கொடுக்கும்.

சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம்  கீழே தரப்பட்டுள்ளது.

1.மே மாதம்  11, 2020  முதல்  செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,

2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்

3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம்  23, 2022வரை141 நாட்களும்

சனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.

இந்த சனியின் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிரநிலைக்குப் போகிறார்.  சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், இதற்கு முந்தைய விளைவுகளின் பின் விளைவுகளால், சிரமப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். அப்போது, உங்களுடைய மாதவருமானமும் அத்கரிக்கும். உங்களுடைய செலவுகளும் அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் சுமுகமான நல்லுறவு ஏற்பட்டு அதன்மூலம் அதிகப்படியான பொறுப்புகளை ஏற்கவேண்டிவரும்.

பரிகாரம்:
பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘நமஸ்கார’மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளில் உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் இரவில் மட்டுமாவது சாப்பிடாமல் இருக்கலாம். நவக்கிரக கோவிலுக்குச் சென்று சனிக்கிழமைகளில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம். மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள்.

குருவின் சஞ்சாரம்  நவம்பர் 2020 க்கு மேல் அனுகூலமற்றுக்  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.

மேற்கூறப்பட்ட பரிகாரங்களோடு, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தால், வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பிரச்சினைகள் அகலும். துர்கையையும், வினாயகரையும் வழிபட்டு வந்தால், ராகு கேதுவின் மூலம் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கிழக்கு, மேற்கு, மற்றும் வடகிழக்கு அனுகூலமான திசைகளாகும். தென் மேற்கு, மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளைத் தவிர்ப்பது நல்லது. பச்சை, வெள்ளை சந்தனம் அல்லது வெளிர் நீல நிறத்தை அதிகம் பயன்படுத்தவும். . கருப்பு, சிவப்பு அடர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தை தவிர்ப்பது நல்லது.
^^^^^^^^^^^^^^^

[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>