/* ]]> */
Dec 252019
 

சனிப் பெயர்ச்சி- 2020-2023:

SATURN

கடகம்:

கடகம் ராசி
கடகம் ராசி

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020  ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கப்படி 2020  டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சனி பகவான் காலபுருஷ லக்கினமான தனுசு ராசியிலிருந்து  மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்…

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம்தேதியன்று சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்துக்கு வருகிறார்.  திருக்  கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் சஞ்சரிக்கிறார். சஞ்சாரம் 2 1/2 வருடங்களுக்கு இருக்கும். இதனை ‘கண்டகச் சனி’ என்பார்கள். இந்த 2 1/2 வருடங்களுக்கு நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
ஏதாவது வகையில் கஷ்டம், மனைவிக்கு மாரக பயம் உண்டாகும். உங்களுக்கு பெரிய அளவில் பண நஷ்டம் ஏற்படும். சேமித்த சேமிப்பு அழியும். தான் இருக்கும் இடத்தைவிட்டு விருப்பத்துக்கு மாறாக வேறு இடத்துக்குப் போக வேண்டி வரும். பயணம் செய்யும்போது வழியில் விபத்துப் பயம் ஏற்படும். கால்நடைச் செல்வம் பாழாகும். வேலையாட்கள், பணியாட்கள் விட்டுப் பிரிவர். மான , கௌரவ பங்கமும் , பதவி நாசமும் ஏற்படலாம். தீராத தலை நோய் ஏற்படும் . சுமையும் தூக்கிப் பிழைக்க வேண்டியதுகூட வரும்.
சரீரத்தில் ஏதாவது தோஷம், நோய் இருந்துகொண்டே இருக்கும். கெட்ட நடத்தையால், பெயர் கெடும். உடல் நலமும் கெடும். காரணமற்ற, குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படும். மனத்தில், ஏதாவது பயம், திகில் இருந்துகொண்டே இருக்கும். சோகம், உறவினர் மறைவு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். பெரும் பசி காணும். மிகக் கீழ் நிலையில், அன்றாடப் பிழைப்புக்குக்கூட வழியின்றிப் பிறரிடத்தில் கையேந்த வேண்டியது வரும்.
7-ல் சனி ‘ கண்டகச் சனி’ எனப்படும். இதில் சனி அசுப பலன்களைக் கொஞ்சம் அதிகமாகவே தருகின்றார். இருக்க இடமின்றி, ஒரு குறிக்கோளின்றி, பல இடத்திலும் அலைந்துகொண்டே இருப்பார். இது சமயம் வெளிதேச வாசமும் இவருக்கு ஏற்படும். ஆனால், அங்கும் இவருக்குப் பலவித கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். 7-ல் சனி எல்லா வகையிலும் அசுப பலன்களையே தருகின்றார்.
அரசியல்வாதிகளுக்கு:
இந்த சனி பகவானின் ஏழாமிட மாற்றம் உங்களது நீண்ட நாள் ஆசைக்கு அலல்து உங்களின் நியாயமான ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும். உங்களது வெற்றிப் பாதைக்கு சில தடைக் கற்களை ஏறறப்டுத்தும். எனவே உங்களுக்கு அவ்வப்போது தடைகளும் பிரச்சினைகளும் தோன்றி மறையும். உங்களுக்குக் கீழ் உள்ள தொண்டர்கள் உங்களை எதிர்த்துக்கொண்டு, எதிரியின் கூடாரத்துக்கு மாறகூடும். உங்களுடைய தலைமை உங்களை முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றக்கூடும்.
மாணவரக்ளுக்கு:
வீட்டிலுள்ள பெரியவர்களின் சொல்படி நடந்தால், பிறர் உங்களைக் குறைகூறும் அளவிற்கு அல்லாமல் ஓரளவு நற்பெயர் எடுக்க முடியும். பொதுவாக உங்கள் ராசிக்கு 7-மிடத்திற்கு வரும் சனிபகவானின் 10 -ம் பார்வை வித்யா ஸ்தானமான 4-ம் இடத்தில் விழுவதால், உங்களது முழு ஆற்றலைக் குலைக்கும். இதற்கு சிகரம் வைத்தாற்போல , நீங்கள் கல்வி விஷயத்தில் என்னதான் சாதிக்க நினைத்தாலும், , குரு மற்றும் ராகுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், உங்களின் முயற்சிகள் தோல்வியைத் தழுவும். இதனால், பிறரின் ஏளனத்திற்கும், பரிகாசத்திற்கும் ஆளாக நேரும். எனவே மிகவும் கவனத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கையோடு, கடவுள் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு:
இந்த 7-மிட சஞ்சாரம் உங்களது குடும்ப வாழ்வில் சிற்சில சோதனைகளைத் தர உள்ளார். ஏழாமிடம் கணவரைக் குறிப்பிடும் இடமாதலால், கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதோடு, மூன்றாம் நபர் தலையீடு இருக்கும். மாமியார், மாமனார்,மைத்துனர், நாத்தனார் போண்றோரின் தலையீடு ஏறபட்டு, உங்களது அமைதியான குடும்ப வாழ்வில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏறப்ட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும். மேலும் இந்த ஏழாமிடம் மாரக ஸ்தானம் என்பதால், உங்களுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ சிற்சில உடல் உபாதைகளும் கண்டங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்களாகவே வலிய சென்று வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பிரச்சினைகள தரும் நபர்கள் அல்லது பிரச்சினை தரும் விஷயங்களை விலக்குவது நல்லது. அதேபோல நீங்கள் உங்கள் பங்கிற்கு வம்பு வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். வீண் வாதம் அல்லது தர்க்க வாதம் அல்லது கடுஞ்சொல் போன்றவற்றை உபயோகிக்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனிப் பெயர்ச்சியில் 3 முறை சனி வக்கிரம் பெறுகிறார். விவரம்  கீழே தரப்பட்டுள்ளது.

1.மே மாதம்  11, 2020  முதல்  செப்டம்பர் மாதம்29, 2020 வரை -142 நாட்களும்,

2. மே மாதம் 23, 2021 முதல் அக்டோபர் மாதம் 11, 2021 வரை 141 நாட்களும்

3. ஜூன் மாதம் 5, 2022 முதல் அக்டோபர் மாதம்  23, 2022வரை141 நாட்களும்

சனி வக்கிர நிலையும் வக்கிர நிவர்த்தியும் பெறுகிறார்.

சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் பெருமளவு இருக்கும். அப்போது சொத்து சம்பந்தமான பிர்ச்சினைகள் தலை தூக்கும். பிரச்சினைகள் உண்டாகும். மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

பரிகாரம்:
பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள். அதுதவிர , நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்லது பச்சை நன்மையைச் செய்யும். கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் ஆழ்ந்த சிவப்பு போன்ற நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. வடக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு நன்மையைச் சேர்க்கும். தெற்கு, தென்மேற்கு அல்லது கிழக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது.

குருவின் சஞ்சாரம் நவம்பர் 2020வரை அனுகூலமற்றுக்  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.

அது தவிர உங்கள் ராசிக்கு நீங்கள் சக்கரத்தாழ்வார் ஆலயம் சென்று அவருக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.
^^^^^^^^^^^^
[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>