/* ]]> */
Oct 282017
 

சனிப் பெயர்ச்சி 2017-2020:

SATURN

விருச்சிகம்:

விருச்சிக ராசி
விருச்சிக ராசி:
   வாக்கியப் பஞ்சாங்கப்படி, இந்தஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி சனி பகவான்  உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார்.  திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் சஞ்சரிக்கிறார். இது 7 1/2 ச் சனியின் கடைசி 2 1/2 வருஷமாகும். பெரும் அளவில் பண விரயம் அல்லது பெரும் தொகையை மோசடியால் இழக்க நேரும். பொருளாதாரம் கெடும். தரித்திரம் தாண்டவமாடும். மனைவி மக்களுக்கு உடல்நலம் கெடும். பணியாட்கள் , வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிவர். மான, கௌரவ பங்கம் வீட்டைவிட்டுக் கட்டாயமக வெளியேற வேண்டியது போன்றவை உண்டாகும். பிறரால் ஏவல், சூன்யம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். நேத்திர ரோகம் ஏற்படும். இவருக்கு இச்சமயம் இன்னொரு மனைவியும் அமையலாம். மனைவியால் ஏமாற்றம் ஏற்படுவதும் உண்டு . சொத்தில் பெரும் பகுதியும் நஷ்டம் ஆகும். சந்ததிக்கு தொல்லையும் அவரால் இவர்களுக்கு கஷ்டமும் ஏற்படும். ஆரோக்கியம் கெடும் தோற்றப் பொலிவு மறையும். ஆண்மையும் வலிமையும் குறையும். முறை மாறின வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டியது வரும். பதவி நாசம் , நிர்ப்பந்த இடமாற்றம் ஆகியவை தோன்றுகின்றது. மனக் கிலேசம், தேவையற்ற சண்டை, உறவினருடன் பகை ஆகியவை ஏற்படுகின்றது.

பணப் பற்றாக்குறையால், பிறரிடம் சென்று கடன் பெற்றாலும், அதனால் பயனடைய முடியாமல் வேறு வழிகளில் அது வீண் விரயமாகி விடுகின்றது. இது 7 1/2ச் சனியின் கடைசிப் பகுதி. மூன்றாம் சுற்றாகி, மாரக தசை, ஆயுர்தாய ஆயுள் முடிவு கூடி வந்து , ஜென்ம சனியில் எதுவும் நேராவிட்டால், இப்பொழுது மாரக பயம் ஏற்படுவதுண்டு. 2-ல் சனி எவ்வகையிலும் அசுபனே.
பெண்களுக்கு:
உடல் நலனில் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டேதான் இருக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அவரது மேல் அதிகாரிகளின் தொந்தரவுகள் அல்லது தவறான அணுகுமுறையால், தேவையற்ற பயமும், வெளியில் சொல்லமுடியாத சில பிரச்சினைகளும் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கும். எனவே ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவதே சாலச் சிறந்தது. மேலும் யாரிடமும் எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் கூறும் எதார்த்தமான கருத்தை அல்லது வார்த்தையை பிறர் தவறாக எடுத்துக்கொள்வதோடு உங்களுக்கே அது வினையாகிவிடும். எனவே எவரிடமும் எச்சரிக்கையாகவே பழகுங்கள். கணவன்-மனைவி ஒற்றுமை சற்று குறைவுபடும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், மிகவும் பாதிப்படையும். வீட்டு சுமையோடு அலுவலகச் சுமையும் சற்று அதிகரிக்கவே செய்யும்.

மாணவர்களுக்கு:
சனி பகவான் சொந்த  வீட்டில் இருந்தபோது கொடுத்த தொல்லைகளைவிட இப்போது தொல்லைகள் குறைவதோடு, எல்லாவகையிலும் ஏற்றம் உண்டாகும்.சென்ற முறை அவர் ஜென்ம ராசியில் சஞ்சரித்தபோது உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட கற்பனைக்கோட்டையைத் தகர்த்தெரிந்தார். ஏனெனில் அவரது மூன்றாம் பார்வை காரிய ஸ்தானமான முன்றாமிடத்திற்கும் தொழில் ஸ்தானமான 10மிடத்திற்கும் ஏற்பட்டதால், உங்களின் முயற்சி மற்றும் ஆர்வம் போன்றவை விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது . ஆனால் சனியின் மாற்றம் உங்களின் திறமை மற்றும் ஆர்வத்தை நல்லவிதமாகப் பிரதிபலிக்கும். நீங்கள் 70 %க்கு முயற்சி எடுத்தால் 80% கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். இத்தகைய நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வருப்போகும் ஆண்டு களில் உங்களது பெற்றோர் ஆசிரியர்களின் நம்பிக்கையைக் குலைக்காவண்ணம் நீங்களாகவே கருத்துடனும் ஆர்வத்துடனும் படித்து அவர்கள் வியக்கும் வண்ணம் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள் .
என்பது உறுதி.
அரசியல்வாதிகளுக்கு:
உங்களின் ராசிக்கு சனி பகவானின் மாற்றம் பல பிரச்சினைகளை உண்டுபண்ணும்.  குருபகவானின் சஞ்சாரம்  செப்டம்பர் மாதத்திற்குமேல் சரியில்லாததால்,  நீங்கள் உங்கள் துறையில் பொறுமையும் தன்னடக்கத்தையும் கடைப்பிடிக்கவேண்டும்.

சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனியின் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால சஞ்சாரத்தில் இரண்டு முறை வக்கிரநிலைக்குப் போகிறார். 18.4.18 முதல் 6.9.18 மற்றும் 30.4.19 முதல் 18.9.19 வரையுள்ள சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள்  மிகவும் குறைவாக இருக்கும். அப்போது கெடு பலன்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். நற்பலன்களும், பண வசதியும் பெருகும். குடும்பத்தாருடன் நல்லுறவு மலரும்.
பரிகாரம்:
உங்களுடைய தசா புத்திகள் சாதகமாக இல்லாவிட்டால், பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள். ஆயுதங்களைக் கையாளும்போது, மிகுந்த எச்சரிக்கை அவசியம். தியானம், யோகா முதலியவை நன்மை செய்யும்.

குருவின் சஞ்சாரம்  செப்டம்பர் 2017க்கு மேல் அனுகூலமற்றுக்  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.
தஞ்சை மவட்டத்திலுள்ள ஆலங்குடிக்கு சென்று குருபகவானைத் தரிசித்து வரவும். ஹயக்ரீவரையும் சக்கரத்தாழ்வாரையும் வணங்கவும். வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய திசைகள் நன்மையைச் சேர்க்கும். தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளைத் தவிர்ப்பது நல்லது. நீலம் , பச்சை மற்றும் ப்ரௌன் அல்லது ஊதா ஆகிய நிறங்கள் நன்மையைச் சேர்க்கும். கருப்பு, சிகப்பு மஞ்சள் அல்லது வெள்ளை ஆகிய நிறங்களைத் தவிர்ப்பது நல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>