/* ]]> */
Oct 282017
 

சனிப் பெயர்ச்சி 2017-2020:

SATURN

துலாம் :

துலாம் ராசி
துலாம் ராசி

வாக்கியப் பஞ்சாங்கப்படி   இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் சஞ்சரிக்கிறார். இது மிகவும் அனுகூலமன சஞ்சாரமாகும். அப்போது நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். இந்த 2 1/2 வருஷமும் பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர்.
பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண  சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது.
பெண்களுக்கு:
இதுநாள்வரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில் இந்த சனியின் மாற்றம் உங்களுக்கு சாதகமான முறையில் செயல்படும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகி உங்களுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமும் நல்லிணக்கமும் ஏறப்டும். பிள்ளைகளும் தங்களின் சொற்படி நடந்து உங்களுக்கு நற்பெயரையும் பாராட்டையும் வாங்கித் தருவார்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கும். மொத்தத்தில் உங்கள் வீடு ஒரு அமைதிப் பூங்காவாகக் காட்சியளிக்கும். சிலருக்கு அலுவலகத்தில் நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். அதேபோல் ஊதிய உயர்வும் பணிமாற்றமும் கிடைக்கும். சிலர் புது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரியும் யோகமும் கிட்டும். நெடுனாளாக குழந்தைப்பேறு இன்றித் தவித்த உங்களில் சிலருக்கு அந்த பாக்கியம் எளிதில் கிடைக்கப் பெறும். ஏனெனில் சனிபகவான் உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதியாவதால், இந்த நல்ல விஷயத்திற்கு பெரிதும் உதவுவார்.  இருப்பினும் ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கும் உங்கள் கணவருக்குமிடையே சில தேவையற்ற வாக்குவாதம் அல்லது சிறுசிறு மனக் கசப்பை ஏற்படுத்தும். இதனால், உங்களுக்கிடையே இருந்த நெருக்கமும் அன்னியோன்னியமும் குறையும். அவ்வப்போது உடல்ரீதியான பாதிப்பு உங்களின் ராசிரீதியாய் உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ ஏற்பட  இந்த ராகுகேது பெயர்ச்சி ஒரு காரணமாய் அமையும்.

மாணவர்களுக்கு:
சோதனைகளைக் கடந்து பல சாதனைகளைப் படைக்கும் விதமாக இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு துணை புரியும். தேர்வில் அமோக வெற்றி மற்றும் நீங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து படிக்க இந்த சனியின் சாதகமான நிலை உங்களுக்கு பெரிதும் துணை நிற்கும். உங்களின் ஆர்வம் மற்றும் செயல்திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் வியந்து பாராட்டுவார்கள். இந்த திருப்திகரமான நிலை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதால், கல்வித் துறையில் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும். மேலும் உங்களுக்கென்று ஒரு தனியிடத்தை மாணவர்களாகிய நீங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். இருப்பினும் குருவின் பனிரண்டாமிட  சஞ்சாரமும் அதன்பிறகு ஜென்ம ராசியின் சஞ்சாரமும்  மற்றும் ராகு கேதுவின் சஞ்சாரமும் உங்கள் மன உறுதியை சற்று அசைத்துப் பார்க்கும் விதமாய் செயல்படும். இருப்பினும் சனியின் சாதகமான சூழல், அதற்கு இடமளிக்காமல் மேலோங்கி நிற்கும். இதனால் உங்கள் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும். இந்த சனிப் பெயர்ச்சி சாதனைகளை நிகழ்த்த வல்லதாக நிகழும் என்பதில் சந்தேகமேயில்லை.
அரசியல்வாதிகளுக்கு:
சனி பகவானின் மூன்றாமிட மாற்றம் உங்களின் அரசியல் துறையில் உங்களால் முடியாத அதாவது சாத்தியமற்ற பல செயற்கரிய சாதனைகளைச் செய்ய உங்களைத் தயார்படுத்துவார். இதுநாள்வரையில் உங்களுக்கு உங்கள் துறையில் இருந்துவந்த குறுக்கீடுகள் மெல்ல மெலல் மறையும். உங்களை எதிர்த்தவர்களும், உங்களை ஏளனப்படுத்தியவர்களும் உங்களிடம் மண்டியிடுவார்கள். அல்லது தங்களின் வேற்றுமையுணர்வுகளைக் களைந்துவிட்டு அவர்களும் உங்களுடன் சேர்ந்து, உங்களின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பாடுபடுவார்கள். அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கென்று தனிப் பெயரோ அல்லது அந்தஸ்தோ கிடைக்க இந்த சனிபகவான் பெரிதும் துணை புரிவார். புகழோடு, பணமும் அந்தஸ்தும் கௌரவமும் உங்களை வந்தடையும். இந்த இரண்டு ஆண்டு இரண்டு மாத காலத்திற்குள் உங்கள் துறையில் நீங்கள் நினைத்த எல்லாவற்றையும் நடத்திக்காட்ட உங்களால் கண்டிப்பாக முடியும். இடையிடையே குரு மற்றும் ராகு கேதுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், ஏற்படும் பாதிப்பால், சிற்சில தடைகளை அல்லது முட்டுக்கட்டைகளை சந்திக்க நேரிடலாம். அதாவது இந்த ஆண்டு  தங்களின் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் விரய குரு என்ற அமைப்பில் குருவானவர் கன்னி ராசியிலும் ஆண்டின் பிற்பாதியில்  ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க உள்ளார். இவை அனுகூலமற்ற சஞ்சாரங்கள். மேலும் ஆண்டு இறுதிவரை ராகு-கேதுவின் சஞ்சாரங்கள் உங்களை கொஞ்சம் கஷ்டப்படுத்த தயாராகும்.
சனியின் வக்கிர சஞ்சாரம்:
இந்த சனியின் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால சஞ்சாரத்தில் இரண்டு  முறை வக்கிரநிலைக்குப் போகிறார்.  18.418 முதல் 6.9.18 மற்றும் 30.4..19 முதல் 18.9.19 வரையுள்ள சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது, உறவினர்களாலும் நண்பர்களாலும், அதிக செலவுகள் ஏற்படும். வீண் அலைச்சல்களும், முயற்சிகளில் தடங்கல்களும் உண்டாகும். முக்கிய நிகழ்வுகளையும் திட்டங்களையும் இச்சமயத்தில் வைத்துக்கொள்ளாமல் நீங்கள் ஒத்திப் போடுவது நல்லது. அதன்மூலம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு வரும் நற்பலன்கள் மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் மிகவும் நன்றாக இருப்பதால், பரிகாரம் எதுவும் தேவைப்படாது. இருப்பினும், தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி சென்று குரு பகவானையும், திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானையும் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானையும் வழிபாடு செய்யவும்.
அது தவிர உங்கள் ராசிக்கு நீங்கள் சக்கரத்தாழ்வார் ஆலயம் சென்று அவருக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.

குருவின் சஞ்சாரம் அனுகூலமற்று  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>