/* ]]> */
Oct 282017
 

சனிப் பெயர்ச்சி 2017-2020:

SATURN

கன்னி:

kanni-rasi

சனி பகவான்,    வாக்கியப் பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம்  26-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.   திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் சஞ்சரிக்கிறார்.  இது மிகவும்  கெட்ட பலன் தருவதாகும். இது அர்த்தாஷ்டம சனி என வழங்கப்படும்.

இச்சமயம் அரசாங்கத்தால் கெடுபிடியும் பகையும் ஏற்படும். கால்நடைகள் பாழாகும். முன் சேர்த்து வைத்த பணம் அழியும். வீட்டை, நாட்டை விட்டு எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியூர்களுக்கு செல்லவேண்டியது வரும்.
மாரக தசை நடந்தால், உயிருக்கும் கண்டம் ஏற்படலாம். வீடு போன்ற சொத்துக்களும் கை நழுவும். மனைவியுடன் பகையும், பிரிவும் ஏற்படும். பந்து ஜனங்களை விரோதம் பண்ணிக்கொள்ள நேரும்.
ஏதாவது துக்கத்தால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பர். வாத நோய், கீல்வாதம் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். கால் இழுத்துக்கொண்டு, ஒரு கால் முடமாகவும் நேரலாம். நாய்க் கடித் தொல்லை, மாடு முட்டல் போன்ற இன்னல்களும் ஏற்படும். மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும்.
மனைவி மற்றும் உறவுப் பெண்களுக்கு நோய் காணும். இவருக்கே கண்டம் தரித்திரம் மேலிடும். சுகம், சௌக்கியம், தூக்கம் எல்லாம் கெடும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மனம் எப்பொழுதும் கெட்டதையே எண்ணிக் கொண்டிருக்கும். மானம், மரியாதை கௌரவம் எல்லாம் பறிபோகும். நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி வீடு வாசலின்றி , இவர் அலையலாம். எதிலும் பயமும் தயக்கமும் ஏற்படும். வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டு , அங்கேயே தவிக்க வேண்டியது வரும்.பகைவரும் வேண்டாதவர்களாலும் மிகுதியான தொல்லை ஏற்படலாம். தனக்கு எப்பொழுதும் கெட்டதே நேரும் என்ற உள்ளுணர்வும் இருந்துகொண்டே இருக்கும். குதர்க்க புத்தியும் , கெட்ட சிந்தையும் இருந்துகொண்டே இருக்கும். ஆக, இந்த சனி, மிகுதியான கெடு பலன்களையே தரும்.
பெண்களுக்கு:
இதுவரை உங்களுக்கு யோக பலன்களாக நடந்து வந்தது. அதற்குக் காரணம் உங்களுக்கு ந்டைபெற்று வரும் சனியின் மூன்றாமிட சஞ்சாரம்தான். ஆனால், இப்போது ஏற்படப் போகும் சனிப் பெயர்ச்சியால், சனி பகவான் உங்கள் 4-ம் வீட்டில் பிரவேசிப்பதால், உங்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நற்பலன்கள் யாவும் தடைப்பட்டுப் போகும். பொதுவாகவே உங்களுக்கு இத்தகைய சனியின் பாதிப்பு, சனியின் மாற்றத்தின் மூலம் ஏற்பட்டதுமே, பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்ட ஆரம்பிக்கும். கூடவே நிகழும் ஜென்ம குருவின் சஞ்சாரமும், ராகு கேதுவின் சஞ்சாரமும் பாதிப்புகளை அதிகரிக்கும். ஜென்ம குருவின் சஞ்சாரம் முடியும்வரை சனியின் இத்தகைய அர்தாஷ்டம சஞ்சாரம் சற்று அதிகமாகவே காணப்படும். ஆனால் குரு  செப்டம்பர் 2917ல் தனது இரண்டாமிட சஞ்சாரத்தைத் தொடங்கியதுமே, உங்களது பொருளாதார பாதிப்புகள் சற்று குறையும். சனியின் நான்காமிட பாதிப்புகளை நீங்கள் தனித்து நின்று சமாளிக்கவும் துணை புரியும். குருவின் 2-மிட சஞ்சாரம் 2016 ஜூலையில் முடிவடைந்ததும் சனியின் சஞ்சாரம் தலை தூக்கும். சற்று கடுமையாகவும் இருக்கும். இந்த காலக் கட்டத்தில் குடும்ப ஒற்றுமை குறைவதோடு, கணவன்-மனைவியின் உறவில் மூன்றாம் நபரின் தலையீடு மற்றும் மூன்றாம் நபரின் தூண்டுதலின் மூலமாக கருத்து வேறுபாடுகள் மற்றும் சிறு பிரிவினைகளுக்கும்கூட வழி ஏற்படலாம். எனவே இந்தக் காலக்கட்டத்தில், தெய்வ பக்தியை வளர்த்துக்கொண்டு , யாரிடமும் அதிகம் பேசுவதையும், அதிகம் பழகுவதையும் அல்லது குடும்ப விஷயங்களை அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதையோ குறைத்துக்கொள்வது நல்லது. இல்லையே பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள நேரும். பொதுவாக இந்த 4-மிட சனிப் பெயர்ச்சி 50 சதவிகிதத்துக்கு மேல் உங்களுக்குப் பாதிப்புகளைத் தருவதாக உள்ளது.
மாணவர்களுக்கு:
மனக் குழபப்மும், தெளிவற்ற நிலையும் சில அதிருப்தியான சூழ்நிலையுமே, இந்த சனிப்பெயர்ச்சியில் மாணவர்களாகிய் உங்களுக்கு ஏற்படும். கல்வி ஸ்தானமான 4-மிடத்தில் இந்தசனி பகவான் சஞ்சரிக்கப் போவதால், ஞாபக மறதியும் கல்வியில் ஆர்வமின்மையும் ஏற்படும். மேலும் பெற்றவர்களுக்கு மனக் கவலையும் ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் இடையே சிறுசிறு அதிருப்தியான நிலையும் ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு, தற்போது முதல், வரும் ஆண்டு, அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிய காணப்படும். அதன்பிறகு, இத்தகைய பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கி ஓரளவு நல்ல பலன்கள் அல்லது ஏற்றமான நிலை உருவாகலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் உங்களின் உழைப்பு மற்றும் முயற்சி போன்றவை சிலருக்கு கேலிக்கூத்தாகத் தென்படும். இதனால் அவப் பெயரும் மனத் தளர்ச்சியும் அவ்வப்போது ஏறப்டும். தெய்வ நம்பிக்கையையும் பக்தியையும் நீங்க்ள் வளர்த்துக்கொள்வதோடு தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும்.
அரசியல்வாதிகளுக்கு:
இந்த சனிப் பெயர்ச்சி, உங்களின் அரசியல் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவாது. அதேபோல பொருளாதார உயர்வையும் ஏற்படுத்தாது. உங்கள் ராசிக்கு குருபகவான் தற்போது  செப்டம்பர் மாதம் வரை குரு ‘ ஜென்ம குரு’ என்ற பொல்லா அமைப்பில் சஞ்சரிப்பதால், உங்கள் துறையில் உங்களுக்கு நெருக்கடி நிலையை ஏறப்டுத்துவார். இதுநாள்வரை உங்களுக்கு உங்கள் துறையில் இருந்த நற்பெயரையும் செல்வாக்கையும் கூட சற்று அசைத்துப் பார்ப்பார். அல்லது குறைத்துவிடுவார். இதனால் உங்களுக்கு ம்னவேதனையும் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலனிலும் நீங்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும். இருப்பினும் குருவின் இரண்டாமிட மாற்றத்திற்குப் பின் இந்த சனியின் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். உங்களின் அரசியல் பயணம் எப்போதும்போல் பிரச்சினைகள் இன்றி ஓரளவு சுமுகமாய்ச் செல்லும். . ஆனால், தற்போது 2015 ஆகஸ்டு வரை நீங்கள் எவ்வளவுதான் நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் உங்களின் உழைப்பு வேலிக்கு இரைத்த நீராகத்தான் போகும். மேலும் உடல் அசதியும் மன உளைச்சலுமே மிஞ்சும். வீட்டு விஷயத்திலும் சற்று கவனத்துடனும் பொறுமையுடனும் நடந்துகொள்வது நல்லது. குடும்ப வாழ்வில் சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். சில மானக்கேடான சம்பவங்களும் தங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. பொதுவாகவே இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதமற்ற சூழ்நிலையயே ஏற்படுத்தும். மற்றும் அமைதியைக் குலைக்கும் விதமாக செயல்படும் .
சனியின் வக்கிர சஞ்சாரம்:

இந்த சனியின் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால சஞ்சாரத்தில்  இரண்டு  முறை வக்கிரநிலைக்குப் போகிறார்.  19.4.18 முதல் 6.9.18 மற்றும் 30.4.19 முதல் 18.9.19 வரையுள்ள சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள்  மிகவும் குறைவாக இருக்கும். உங்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த்க்கொள்ளலாம். புதிய பிரச்சினைகள் எதுவும் வராது. ஏற்கெனவே பட்ட காயங்களுக்கு மருந்துபோடவே சரியாக இருக்கும். உங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ள பெரு முயற்சியில் ஈடுபடுவீர்கள்.அதன்மூலம் சமூகத்தில் உங்கள் நிலையை உயர்த்திக்கொள்வீர்கள். ஆக்கபூர்வான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் துயரம் மறையும். ஆனால், உங்கள் போக வாழ்வில் மகிழ்ச்சி சற்று குறையும்.

பரிகாரம்:
பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செய்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள். எதை எடுத்தாலும் மிகுந்த எச்சரிக்கை அவசியம். இரண்டரை வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுதவிர , சிகப்பு, மஞ்சள், சந்தனம் மற்றும் ஊதா நிறம் நன்மையைச் செய்யும். பச்சை, நீலம் மற்றும் கருப்பு போன்ற நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு நன்மையைச் சேர்க்கும். தெற்கு, தென்மேற்கு அல்லது கிழக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது.

குருவின் சஞ்சாரம் செப்டம்பர்  2017 அனுகூலமற்றுக்  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.

அது தவிர உங்கள் ராசிக்கு நீங்கள் சக்கரத்தாழ்வார் ஆலயம் சென்று அவருக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.
^^^^^^^^^^^^^^^^^^
[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “சனிப் பெயர்ச்சி 2017-2020 கன்னி”

  1. இவன் கிட்ட ஜாதகம் பார்த்தா நல்லா இருக்குறவனும் அல்பாயுசுல போயிடுவான்…. இந்த பதிவுகளை படித்தாலே நல்லா இருக்குறவனும் எழவு விழுந்த மாதிரி ஆயிடுவான்… எப்படி எழுதணும்னு கூட தெரியல…. தன்னம்பிக்கை உள்ளவனும் இவன் பதிவை பார்த்தால் அவ்வளவு தான் செத்தான்….

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>