/* ]]> */
Oct 282017
 

சனிப் பெயர்ச்சி -2017-2020:

SATURN

கடகம்:

கடகம் ராசி
கடகம் ராசி

வாக்கியப் பஞ்சாங்கப்படி சனி பகவான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.   திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் சஞ்சரிக்கிறார்.  இது உங்களுக்கு  மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும்.
புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும்.
இந்த 2 1/2 வருஷமும் இவர்களுக்கு ராஜயோகம்தான். (ஜாதகத்தில் ராஜயோகம் அமையாவிட்டாலும் ) இது யோக காலமாகவே நடக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும்.
நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம்.
பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.
அரசியல்வாதிகளுக்கு:
பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.
மாணவர்களுக்கு:
உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும்.
பெண்களுக்கு:
உங்களுக்கு சாதகமாகவே அனைத்தும் நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். மேலும் உங்களின் முயற்சியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அலல்து நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.
சனியின் வக்கிர சஞ்சாரம்:
இந்த சனியின் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால சஞ்சாரத்தில் இரண்டு முறை வக்கிரநிலைக்குப் போகிறார்.  19.4.18 முதல் 6.9.18 மற்றும் 30.4.19 முதல் 18.9.19 வரையுள்ள சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகளால்  நிலையற்ற தன்மை உருவாகும்.  அப்போது, உங்களுடைய சகோதர சகோதரிகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உங்களுடைய முயற்சிகள் மற்றும் செயல்களுக்கு பலவிதமான தடைகள் உருவாகும். இந்த சனிப் பெயர்ச்சியினால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய பயன்களையெல்லாம் இவர்கள் ஒழித்துவிடுவார்கள். நிலையற்ற தன்மை உருவாகும். அரசாங்கத்திடமிருந்தும் அரசு அதிகாரிகளிடமிருந்தும் மிரட்டல் பயம் இருக்கும்.

பரிகாரம்:
இது உங்களுக்கு யோகமான நேரம் என்பதால், பெரிய அளவில் பரிகாரங்கள் தேவைப்படாது. ஆனால், சனி மற்றும் குருவின் வக்கிர காலங்களில் ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். பொதுப் பரிகாரங்களையும் கவனத்தில் கொள்ளவும். நீலம், பச்சை மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் நன்மை தரும். கிழக்கு, மேற்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்குஆகியவை உங்களுக்கு நன்மை பயக்கும் திசைகளாகும். அது தவிர உங்கள் ராசிக்கு நீங்கள் சக்கரத்தாழ்வார் ஆலயம் சென்று அவருக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.

குருவின் சஞ்சாரம் அனுகூலமற்றுக்  காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு  மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.
^^^^^^^^^^^^^^
[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>