/* ]]> */
Mar 162012
 

சச்சின் டெண்டுல்கர் 100வது சதம் சாதனை படங்கள் – நூறாவது நூறு

sachin tendulkar 100th 100 hundredth hundred versus bangladesh
சச்சின் டெண்டுல்கர் நூறாவது நூறு

சச்சின் நூறாவது சதத்தை வங்க தேசத்துக்கு எதிராக ஆசிய கோப்பை ஆட்டத்தில் இன்று பூர்த்தி செய்தார். சச்சின் இன்றைய ஆட்டத்தில் 147 பந்துகளை சந்தித்து 114 ரன்கள் அடித்து உலக சாதனை புரிந்தார். சச்சின் டென்டுல்கருக்கு அடுத்து வரும் ரிக்கி பாண்டிங்க் 71 சதங்களை இதுவரை அடித்திருக்கிறார். ஆகவே சச்சினின் இந்த சாதனை முறியடிக்கப் பட கூடிய சாதனையாக தெரியவில்லை.

 

sachin tendulkar 100th century hundredth century சச்சின் டெண்டுல்கல் நூறாவது சதம்

sachin tendulkar 100th century hundredth century சச்சின் டெண்டுல்கல் நூறாவது சதம்

100வது சதத்தை பூர்த்தி செய்து வழக்கம் போலவே வானை வணங்கி பின் ரசிகர்களுக்காக மட்டையை உயர்த்தினார் சச்சின்.

 

tendulkar scores 100th century versus bangladesh
                                                                 tendulkar scores 100th century versus bangladesh

 

பின்னர் ரமீஸ் ராஜாவிடம் சச்சின் தனது நூறாவது சதத்தை பற்றி பேசுகையில் தான் எப்பொழுதுமே சதத்துக்காக விளையாடவில்லை ஆனால் அனைவரும் 100வது சதத்தை பற்றி பேசி பேசி கவலை தந்து விட்டனர். ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் உள்ளது. ஒரு ஐம்பது கிலோ எடை குறைந்ததைப் போல உணர்வதாய் தெரிவித்தார்.

Sachin-Tendulkar-finally-gets-his-100th-Century-India-vs-Bangladesh-Asia-Cup sachin world record

Sachin-Tendulkar-finally-gets-his-100th-Century-India-vs-Bangladesh-Asia-Cup sachin world record

பின்னர் 100வது சதம் பூர்த்தி செய்த அன்று மற்றவர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டபோது,

“கனவுகள் உண்மையாகும்! என் கனவு உண்மையாக 22 ஆண்டு ஆனது . இந்தியா கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றபோது அது பூர்த்தி ஆனது. அதனால் உங்கள் விளையாட்டை அனுபவித்து விளையாடுங்கள் ! கனவுகளை துரத்துங்கள் ! என்றாவது ஒரு நாள் கனவுகள் உண்மையாகும் !” என்றார்

சச்சினுக்கு எங்கள் வாழ்த்துக்கள் !

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>